இவரெல்லாம் இந்திய அணியில் இருப்பதே அதிருஷ்டம்தான்.. இதில் கேப்டன் பதவி வேறா.. கம்பீர் நறுக் கமெண்ட்
கான்பூர்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூர் நகரில் நாளை தொடங்குகிறது.
Recommended Video
இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி களம் இறங்கப் போவதில்லை என்பதால் அஜிங்கிய ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
தொடர்ச்சியாக சரியான ஆட்டங்களை வெளிப்படுத்தாமல் இருக்கும் அஜிங்கிய ரஹானே கேப்டனாக களமிறங்க உள்ளது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் ஆச்சரியம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதிருஷ்டம்
கவுதம் கம்பீர் கூறுகையில், ரஹானே இந்திய அணியில் இருப்பது ஒரு அதிர்ஷ்டம் தான் என்று தெரிவித்திருக்கிறார் . அணியில் இடம் பெற தகுதி இல்லாத ஒரு நபர் கேப்டனாகவும் உள்ளார் என்ற கருத்து தொனி கம்பீர் பேச்சில் இருந்தது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவுதம் கம்பீர் இது பற்றி கூறுகையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ராகுலுடன் மயங்க் அகர்வால் ஓப்பனிங்கில் இறங்க வேண்டும். சுப்மன் கில் நான்காவது இடத்தில் ஆட வேண்டும் என்பது எனது விருப்பம் .

மயங்க் அகர்வால் ஓப்பனிங் பேட்டிங்
மயங்க் அகர்வால் இங்கிலாந்தில் ஓபனிங் பேட் செய்துள்ளார். எனவே அது இந்த தொடரில் பலன் கொடுக்கக் கூடும். சுப்மன் கில் 4வது இடத்தில் களம் இறங்கலாம். இந்திய அணியில் அஜிங்கிய ரஹானே இடம்பிடித்தது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதால், அணியில் இருக்கக்கூடும் என்று தெரிகிறது.

இந்திய அணி
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் ஆடிய விதத்தை வைத்து பார்த்தால், இந்திய அணியில் இனிமேல் அவருக்கு இடம் கிடைக்காது என்றுதான் நினைத்திருந்தோம். இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொண்டு தனது இடத்தை பத்திரப் படுத்திக் கொள்வார் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

இர்பான் பதான்
முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூட இதே போன்ற கருத்தை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில் அஜிங்கிய ரஹானே எவ்வாறு விளையாடுகிறார் என்பதை அணி நிர்வாகம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அவர் மிக மோசமான ஆட்டத்தை கடந்த ஓராண்டாக வெளிப்படுத்தி வருகிறார். மிடில் ஆர்டரில் இறங்கி அணிக்கு வலு சேர்க்கக் கூடிய பேட்ஸ்மேன் யாராக இருக்க வேண்டும் என்பதில் அணி நிர்வாகம் தெளிவாக இருக்க வேண்டும். நியூசிலாந்துக்கு எதிராக ரகானே எவ்வாறு ஆடுகிறார் என்பதை கவனித்து தான் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா போட்டி தொடருக்கு அணியை தயார்படுத்த வேண்டும். இவ்வாறு இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

பும்ரா கூட அதிக ரன்கள்
இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணத்தின்போது அஜிங்கிய ரஹானே 7 இன்னிங்ஸ்களில் 109 ரன்கள் மட்டுமே எடுத்தார். 15 ரன்கள் தான் அவரது அவரேஜ்ஜாக இருந்தது. எவ்வளவு குறைவாக அவர் ரன் எடுத்தார் என்பதை இந்த புள்ளி விவரம் புட்டு புட்டு வைக்கும். அந்த தொடரில், பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர் ஆகியோர் கூட ரஹானேவை விட அதிகமாக ரன் எடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . ஒருவேளை முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே சிறப்பாக ஆடாவிட்டால் நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் விராட் கோலி, களம் கண்டதும் ரஹானே ஓரங்கட்டப் படுவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications