கருணை கொலைக்கு அனுமதி... முக்கியமான நாடுகளின் பட்டியலில் இணைந்தது இந்தியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்யலாம்..சுப்ரீம் கோர்ட் அதிரடி- வீடியோ

  டெல்லி: கருணை கொலைக்கு அனுமதி அளித்ததன் மூலம் இந்தியா கருணைக் கொலையை அனுமதிக்கும் பல உயர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது.

  கருணைக் கொலை தொடர்பான வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்தது. தீராத நோய் தாக்கி, அவதிப்படும் மக்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

  India joins important club of Passive Euthanasia Nations

  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. மக்களுக்கு கவுரமாக மரணமடைய எல்லா உரிமையும் இருக்கிறது என்றுள்ளது.

  மொத்தம் 5 வகையான கருணை கொலை முறைகள் இருக்கிறது. இதில் இந்தியா மிதமான கருணை கொலை வகையில் சேர்ந்துள்ளது.

  அதன்படி நோயாளி அதிகம் கஷ்டப்படும் போது செயற்கை சுவாசம் உள்ளிட்ட மருத்துவ முறைகளை நீக்கி கருணை கொலை செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. உலகில் சில நாடுகளில் மட்டுமே இந்த வகையில் கருணை கொலை செய்யப்படுகிறது.

  நெதர்லாந்து, கனடா, பெல்ஜியம், கொலம்பியா ஆகிய நாடுகளில் மிதமான கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்தியா அந்த பட்டியலில் இணைந்து இருக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Supreme court permits Passive Euthanasia With Guidelines.India joins important club of Passive Euthanasia Nations like Netherlands, Canada, Belgium, Colombia in legalising passive euthanasia.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற