1962ல் நம்மிடம் ஆயுதம்தான் இல்லை.. ஆனால் வீரர்கள் "டஃப்" கொடுத்தனர்.. சீனா மறந்திருக்க முடியாது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: 1962ம் ஆண்டு சீனாவிடம் இந்தியா தோற்றதற்கு நமது நாட்டுப் படையினர் காரணம் இல்லை. மாறாக நம்மிடம் அப்போது போதிய ஆயுதங்கள் இல்லை என்பதுதான் முக்கியமான காரணம். அது மட்டும் இருந்திருந்தால் அப்போதே நாம் சீனாவுக்கு நல்ல ஆப்பாக வைத்திருக்க முடியும்.

எல்லையில் சீனா மீண்டும் வாலாட்ட ஆரம்பித்துள்ளது. போர் தொடுப்போம், இந்தியாவுக்குப் பாடம் புகட்டுவோம் என்று பொங்க ஆரம்பித்துள்ளனர். படைகளையும் எல்லைப் பகுதியில் குவித்து வைத்து வருகின்றனர்.

1962ம் ஆண்டு கொடுத்த பாடத்தை இந்தியா மறக்கக் கூடாது என்று கூற ஆரம்பித்துள்ளது சீனா. ஆனால் உண்மையில் 1962ம் ஆண்டு நமது படையினர் நல்ல வலுவுடன்தான் இருந்தனர். நம்மிடம் அப்போது இருந்த மிகப் பெரிய பலவீனம் ஆயுதங்கள் இல்லாமைதான்.

[சீனாக்காரன் ஏன் நம் மீது இவ்வளவு "காண்டாக" இருக்கிறான்.. இதுதாங்க காரணம்!]

தில் வீரர்கள்

தில் வீரர்கள்

1962ம் ஆண்டு நடந்த போரின்போது இந்திய ராணுவத்தினர் மிகக் கடுமையாக மோதினர். சீன வீரர்களைப் பார்த்து அவர்கள் சற்றும் பயப்படவே இல்லை. மாறாக துணிச்சலுடன் மோதினர்.

பல இடங்களில் நெருக்கடி

பல இடங்களில் நெருக்கடி

இந்திய வீரர்கள் மிகவும் சாதுரியமாக செயல்பட்டதால் பல இடங்களில் சீனப்படையினர் திணறவே நேரிட்டது. இந்திய வீரர்கள் தைரியத்துடன் இருந்த ஆயுதங்களைக் கொண்டு மோதியதால்தான் சீனாவால் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை.

தீரத்துடன் போரிட்ட வீரர்கள்

தீரத்துடன் போரிட்ட வீரர்கள்

இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிட்டதால்தான் இந்திய நிலப்பரப்பில் பெருமளவில் சீனா அபகரிக்க முடியாமல் தடுக்கப்பட்டது. அப்படியும் காஷ்மீர், இமாச்சல் பிரதேசத்தில் பெருமளவிலான நிலப்பரப்புகளை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது.

ஆயுதங்கள் கைவிட்டன

ஆயுதங்கள் கைவிட்டன

நம்மிடம் திறமையான வீரர்கள், அதிகாரிகள் இருந்தும் கூட போதிய அளவில் ஆயுதங்கள் இல்லாத காரணத்தால்தான் சீனாவிடம் தோல்வியுறும் நிலை ஏற்பட்டது. ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை.

தெம்பும் இருக்கு.. திராணியும் இருக்கு

தெம்பும் இருக்கு.. திராணியும் இருக்கு

நம்மிடம் தற்போது ஆயுத பலமும் உள்ளது. அருமையான படையினரும் உள்ளனர். நவீனமான ராணுவத் திறமை நம்மிடம் உள்ளது. எனவே அவர்கள் 10 அடி அடித்தால் குறைந்தது 5 அடியாவது நம்மால் அடிக்க முடியும். அவர்கள் 5 அணுகுண்டுகளை வீசினால் நம்மால் குறைந்தது 2 குண்டுகளையாவது வீச முடியும். எனவே போர் என்று வந்தால் சீனாவால் எளிதில் வெல்ல முடியாது என்பதே நிதர்சனம் என்கிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India last the battle in 1962 against China. But the thing is our soldier were fought well without any fear. We lost the war due to the shortage of weapons.
Please Wait while comments are loading...