For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வசந்தம் சுமந்து வரும் வண்ணங்களின் பண்டிகை - களைகட்டியது “ஹோலி” கொண்டாட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: வட இந்தியர்களின் வண்ணங்களின் பண்டிகையான ஹோலி கொண்டாட்டங்கள் இன்று களை கட்டியுள்ளது.

வண்ணப் பொடிகளைத் தூவி மக்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆட்டம்பாட்டம், கொண்டம் என வட இந்தியாவில் உற்சாகம் களைகட்டியுள்ளது.

ஹோலா என்ற வார்த்தைக்கு "நல்ல அறுவடைக்கு நம்முடைய நன்றியைத் தெரிவிப்பது"என்று அர்த்தம்.

இயற்கை வளம் செழிக்க:

இயற்கை வளம் செழிக்க:

அறுவடையைக் கொண்டாடடுவதோடு, அடுத்து வரும் வசந்த காலத்தில் இயற்கை வளம் செழிப்பாக இருந்து மனிதர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதே இந்தப் பண்டிகையின் நோக்கம். அதற்காகத்தான் வண்ணப் பொடிகளை ஒருவர் மற்றொருவர் மீது வாரி இறைத்துக்கொண்டு, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.

கொண்டாடிய ராணுவத்தினர்:

கொண்டாடிய ராணுவத்தினர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் செக்டார் பகுதியில் ராணுவத்தினர் பொதுமக்கள் வண்ணப் பொடிகளை தூவி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.

ஸ்பைஸ் ஜெட்டின் ஹோலி:

ஸ்பைஸ் ஜெட்டின் ஹோலி:

டெல்லியில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணிகள் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். கோவையில் உள்ள குஜராத் மாநில மக்கள் வண்ணப் பொடிகளை தூவி ஹோலி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

ரயில்கள் தற்காலிக நிறுத்தம்:

ரயில்கள் தற்காலிக நிறுத்தம்:

ஹோலி பண்டிகைக் கொண்டாட்டத்தை ஒட்டி டெல்லியில் இன்று மதியம் 2 மணிவரை மெட்ரோ ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. அதேபோன்று டெல்லி அரசுப் போக்குவரத்து நிறுவனத்தின் மாநிலம் விட்டு மாநிலத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் உள்பட பேருந்து சேவையை இன்று 2 மணிக்கு மேல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
people in Uttar Pradesh, West Bengal and Madhya Pradesh daubed each other with colours marking the celebration of Holi on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X