இந்தியாவில் நம்பர்.1 முதல்வர் மமதா பானர்ஜி.. இந்தியா டுடே சர்வே
இந்திய முதல்வர்களில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிதான் சிறந்த மாநில முதல்வர் என்று இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: இந்திய முதல்வர்களில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிதான் சிறந்த மாநில முதல்வர் என்று இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் அமைப்பு இணைந்து இந்தியா முழுக்க சர்வே நடத்தியது. இந்த சர்வே முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
பல முக்கியமான விஷயங்கள் குறித்து இதில் மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. இந்தியாவில் சிறந்த மாநில முதல்வர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கான பதில்கள் வெளியாகி உள்ளது.

மமதா பானர்ஜி
இந்த நிலையில் 30% ஆதரவுடன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி முதலிடம். ஆட்சி திறன், அரசியல் அறிவு, ஆட்சி முறை என்று பல காரணங்களை வைத்து இந்த சதவிகிதம் கிடைத்துள்ளது. சென்ற முறை இரண்டாம் இடத்தில் இருந்த மமதா பானர்ஜி தற்போது முதல் இடம் பிடித்துள்ளார்.

இரண்டு பேர்
சென்ற முறை முதல் இடத்தில் இருந்த நிதிஷ் குமார், இந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த முறை இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இடத்தை பகிர்ந்துள்ளார். இருவருக்கும் 10% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உ.பி முதல்வர் ஆதித்யநாத் என்ன இடம்
உ.பி முதல்வர் ஆதித்யநாத்திற்கு 9% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு 7% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டிஸ்கர் முதல்வர் ராமன் சிங்கிற்கு 5% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்கு 5% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு 4% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்தடுத்த இடம்
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு 4% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு 3% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அசாம் முதல்வர் சோனோவாலுக்கு 3% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவா முதல்வர் பாரிக்கர், குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி, ஹரியானா முதல்வர் மனோகர் கட்டார், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் ஆகியோருக்கு தலா 2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications