பூடான் எல்லை கிராம மக்கள் வெளியேற ராணுவம் அறிவுறுத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பூடான் எல்லையில், சர்ச்சைக்குரிய டோக்லம் பகுதியை ஒட்டி வசிக்கும் இந்திய கிராம மக்களை வெளியேறும்படி, இந்திய ராணுவத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பூடான் அருகே, இந்திய எல்லையை ஒட்டியுள்ள டோக்லம் என்ற இடத்தை, சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. எனினும், அதனை மேற்கொண்டு முன்னேறவிடாமல், சீன வீரர்களை, இந்திய ரானுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர்.

 Indian Army Orders People Near Doklam to Vacate Their Villages

அங்கிருந்து வெளியேற இந்திய ராணுவமும் மறுத்துவிட்டது. சீனாவும் பலமுறை நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டல் விடுத்து வருகிறது. இந்நிலையில், எந்நேரமும் போர் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, டோக்லம் எல்லையை ஒட்டியுள்ள நதாங் கிராமத்தில் வசிக்கும் இந்திய மக்களை, உடனடியாக, வெளியேறும்படி, ரானுவத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்கள் வெளியேறினால் அந்த இடத்தை மையமாகக் கொண்டு, இந்திய ராணுவத்தினர் முகாம் ஏற்படுத்தி தீவிர கண்காணிப்பை மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, இதுபற்றி செய்தி ஒன்றை வெளியிட்ட சீன தேசிய ஊடகம், ஒரு பெரிய மோதலுக்கான, கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது. இந்தியா தயாராக இருக்கும்படி, எச்சரித்திருந்தது.

இதன் அடிப்படையிலேயே, இந்திய ரானுவமும், போருக்கு தயாராகி வருவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Indian Army has ordered the evacuation of a village close to the Doklam tri-junction.
Please Wait while comments are loading...