For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”ஆட்டோமேஷன்” மயமாகும் ஐ.டி துறை - வேலைவாய்ப்புகள் குறையும் அபாயம்; எச்சரிக்கிறது நாஸ்காம்!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: நாட்டில் ஐ.டி துறைகள் ஆட்டோமேஷன் மயமாக்கப்பட்டு வருவதால் வேலைவாய்ப்புகள் குறையும் அபாயகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

டி.சி.எஸ், இன்போசிஸ் போன்ற முன்னணி ஐ.டி நிறுவனங்கள் அதிக அளவில் ஆட்டோமேஷன் மயமாக்கப்பட்டு வருகின்றன.

இதனால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஐ.டி துறையில் 20 சதவீதம் வரை வேலைவாய்ப்புகள் குறையும் என இந்திய தொழில்நுட்பத் துறையின் தேசிய அமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது.

குறைந்த வேலைவாய்ப்பு:

குறைந்த வேலைவாய்ப்பு:

குறிப்பாக இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களான டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல்., காக்னசண்ட் ஆகியவை சென்ற 2015 ஆம் ஆண்டில் 24 சதவீதம் குறைவாகவே ஆட்களை வேலைக்கு தேர்வு செய்துள்ளது.

வருமானக் கணக்கு:

வருமானக் கணக்கு:

பெரும்பாலும், இந்திய ஐ.டி நிறுவனங்களுக்கு 60 சதவீத வருமானம் அமெரிக்காவில் இருந்தும் 25 சதவீதம் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும்:

அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும்:

அமெரிக்காவுக்கு இந்தியா தேவையா? அல்லது இந்தியாவுக்கு அமெரிக்கா தேவையா? என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும்.

பாதிப்பு இருக்காது:

பாதிப்பு இருக்காது:

இருநாடுகளும் ஒன்றுக்கொன்று தேவை என்பதால் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ஐ.டி துறை வேலைவாய்ப்புகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.

English summary
The next phase of growth of the Indian IT services industry is dependant on its ability to innovate and break down organisational silos to provide new-age solutions to clients.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X