For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு சலுகைக்கட்டணத்தில் மாற்றம்... அடுத்த ஆண்டு அமல்படுத்த திட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி : ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், முழு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை, அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு, ரயில்களில் தற்போது சலுகை கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்படுகிறது. குடும்பத்தினருடன் செல்லும்போதும், இந்த சலுகை, அவர்களுக்கு கிடைக்கிறது. அடுத்தாண்டு முதல், இந்த திட்டத்தில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

railway ticket counter

இதன்படி, மூத்த குடிமக்கள், தங்கள் குடும்பத்தினருடன் ரயிலில் பயணம் செய்ய நேரிட்டால், தங்களுக்கான டிக்கெட்டை மட்டும் தனியாக எடுக்க வேண்டும்.

இப்படி எடுத்தால், சலுகை கட்டண வசதி கிடைக்கும். குடும்பத்தினருடன், தங்கள் பெயரையும் சேர்த்து, டிக்கெட் எடுத்தால், இந்த கட்டண சலுகையை பெற முடியாது.

இதுகுறித்து, அனைத்து ரயில்வே மண்டலங்களின் தலைமை வர்த்தக மேலாளர்களுக்கு, கடந்த மாதம், 31 ஆம் தேதி, ரயில்வே வாரியம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

English summary
Indian railways planned to ban on conessions to senior citizen from next year
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X