For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை- கோவை.. சென்னை- டெல்லி உள்பட முக்கியமான 100 வழித்தடத்தில் 150 தனியார் ரயில்கள்.. விவரம்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய வழித்தடத்தில் 150 தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக இந்திய ரயில்வே துறையின் மூத்த அதிகாரிகள் பிரபல ஆங்கில இதழுக்கு தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக ஏலம் அடுத்த மாதம் அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சகத்தின் பொது தனியார் கூட்டாண்மை மதிப்பீட்டுக் குழு (பிபிபிஏசி) டிசம்பர் 19 ம் தேதி இந்த முன்மொழிவுக்கு முன்னுரிமை அளித்து ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் தனியார்களை ரயில்களை இயக்கும் பணியில் ஈடுபடுத்துவத்தும் சீர்திருத்தத்தை முன்னெடுப்பதற்கான பாதையை ரெயில்வே துறைக்க தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் இதுவரை பயணிகள் ரயில்களை இயக்குவது மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயில்வே துறையின் பணிதான் என்ற நீண்ட ஏகபோகமும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

கொல்கத்தா- சென்னை

கொல்கத்தா- சென்னை

மும்பை-கொல்கத்தா, மும்பை-சென்னை, மும்பை-குவாஹாட்டி, புது டெல்லி-மும்பை, திருவனந்தபுரம்-குவாஹாட்டி, புது டெல்லி-கொல்கத்தா, புது டெல்லி -பெங்களூரு, புது டெல்லி-சென்னை, கொல்கத்தா-சென்னை மற்றும் சென்னை-ஜோத்பூர் ஆகிய வழித்தடங்களை தனியாருக்கு ஏலம் விட திட்டமிட்டுள்ளதாக பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் அந்த ஆங்கில இதழுக்கு தெரிவித்துள்ளார்.

சென்னை-செகந்திரபாத்

சென்னை-செகந்திரபாத்

இதேபோல் மும்பை-வாரணாசி, மும்பை-புனே, மும்பை-லக்னோ, மும்பை-நாக்பூர், நாக்பூர்-புனே, செகந்திராபாத்-விசாகப்பட்டினம், பாட்னா-பெங்களூரு, புனே-பாட்னா, சென்னை-கோயம்புத்தூர், சென்னை-செகந்திராபாத், சூரத்-வாரணாசி, கொல்கத்தா. புது டெல்லியை பாட்னா, அலகாபாத், அமிர்தசரஸ், சண்டிகர், கத்ரா, கோரக்பூர், சாப்ரா மற்றும் பாகல்பூர் ஆகியவற்றுடன் இணைக்கும் சில வழித்தடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

11 சென்னை

11 சென்னை

100 வழித்தடங்களில் 35 வழித்தடங்கள் புதுடெல்லியை இணைக்கும்ரயில்களை கொண்டது. 26 வழித்தடங்கள் மும்பை , 12 வழித்தடங்கள் கொல்கத்தா, 11 வழித்தடங்கள் சென்னை மற்றும் 8 வழித்தடங்கள் பெங்களூரு ஆகிய அனைத்து பெருநகரங்களையும் இணைக்கும. இந்த வழித்தடங்களை தேர்ந்தெடுப்பதில் அதன் வணிக நம்பகத்தன்மை (லாபம் அதிகம் கிடைக்கும) முக்கிய அளவுகோலாக தெரிகிறது.

லக்னோ ரயில்

லக்னோ ரயில்

மெட்ரோ நகரங்களை இணைக்காத பாதைகளான கோரக்பூர்-லக்னோ, கோட்டா-ஜெய்ப்பூர், சண்டிகர்-லக்னோ, விசாகப்பட்டினம்-திருப்பதி மற்றும் நாக்பூர்-புனே ஆகியவையும் முன்மொழியப்பட்டுள்ளதாம்.

விரைவில் ஏலம்

விரைவில் ஏலம்

இது தொடர்பாக எக்கனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனம் ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவை தொடர்பு கொண்டு கேட்டதாம். அவர், ரயில்வே துறை தனியார் ரயில்களுக்கான பாதைகளை அடையாளம் கண்டுள்ளது. 150 ரயில்களை இயக்க தனியார் ஆப்ரேட்டர்களுக்கு ஏலத்தில் பங்கேற்கும அழைக்கும் ரயில்வேயின் திட்டத்தை "பிபிபிஏசி ஏற்கனவே அனுமதித்துள்ளது. ஒருவேளை 10-15 நாட்களில் ஏலத்திற்கு தனியார்கள் அழைக்கப்படுவார்கள், . இது இந்திய ரயில்வேக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் "என்று யாதவ் தெரிவித்தார்.

English summary
Indian Railways selected 100 routes to run 150 private passenger train rakes and bids for the routes are likely to be invited next month
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X