மோசம்.. டிரம்ப் டவரின் டெல்லி அப்பார்ட்மெண்டில் வீடு வாங்குங்கள்.. அதிபர் மகனுடன் சாப்பிடுங்கள்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 'டிரம்ப் டவர்' நிறுவனத்திற்கு சொந்தமான டெல்லி அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கினால் அதிபரின் மகன் ஜூனியர் டிரம்ப்புடன் உணவு சாப்பிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 'டிரம்ப் டவர்' நிறுவனத்திற்கு சொந்தமான டெல்லி அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கினால் அதிபரின் மகன் ஜூனியர் டிரம்ப்புடன் உணவு சாப்பிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக டெல்லி முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டு இருக்கிறது.
டிரம்ப்பின் 'டிரம்ப் டவர்' நிறுவனத்திற்கு இந்தியாவில் இருந்து நிறைய வருமானம் வருகிறது. அங்கிருந்து அவர் இந்தியர்களை வெளியேற்ற பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
ஆனால் அதே சமயத்தில் இந்தியா மூலம் அவர்களுக்கு 3 மில்லியன் டாலர் வருமானம் வருவதாக கணக்கு கூறுகிறது. தற்போது இந்த அறிவிப்பு வேறு புதிய பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது.

வீடுகள்
டிரம்ப்பின் நிறுவனமான டிரம்ப் டவர்ஸ் இந்தியாவில் நான்கு இடங்களில் அப்பார்ட்மெண்ட் கட்டுகிறது. டெல்லி, கொல்கத்தா, மும்பை, புனே ஆகிய இடங்களில் கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. இதன் விலை லட்சக்கணக்கில் ஆரம்பிக்கிறது. இதற்கான புக்கிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இந்தியா வருகை
இதில் டெல்லி அப்பார்மெண்டை பார்வையிட டிரம்ப் ஜூனியர் இந்த வாரம் இந்தியா வருகிறார். அவர் டெல்லியில் அந்த கட்டிடத்தை திறந்து வைப்பார். அதே போல் கொல்கத்தா, மும்பை, புனேயில் இருக்கும் கட்டிடங்களையும் பார்வையிடுவார்.

உணவு
இந்த நிலையில் இருக்கும் அந்த அப்பார்ட்மெண்டில் நாளைக்குள் வீடு புக் செய்தால் டிரம்ப்பின் மகன் ஜூனியர் டிரம்புடன் சாப்பிட முடியும் என்று விளம்பரம் செய்து இருக்கிறார்கள். ஆம் அவரின் விருந்து நிகழ்வில் இதன் மூலம் கலந்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளனர்.

சர்ச்சை
தற்போது இது பெரிய சர்ச்சையாகி இருக்கிறது. இப்படி அமெரிக்காவின் முக்கியமான 'முதல் குடும்பம்' வியாபாரம் செய்ய கூடாது என்று கருத்துக்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இது அரசு அதிகாரத்தை மோசமாக பயன்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ளனர்.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications