Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாகனம் மோதி உயிரிழப்பு ஏற்பட்டால் டிரைவருக்கு 10 வருடம் சிறை.. சட்டத்தை நிறுத்தி வைத்த மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் குற்றவியல் சட்டங்களை முற்றிலுமாக மாற்றியமைக்கும் மத்திய அரசு, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய ஷாக்சியா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா ஆகிய 3 சட்டங்களை ஜூலை 1 முதல் அமல்படுத்துகிறது. அதேநேரம் பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் ஹிட் அண்ட் ரன் வழக்குகளில் புதிய தண்டனை விதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

தற்போது அமலில் உள்ள ஐபிபி என்று அழைக்கப்படும் குற்றவியல் சட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டவை. இந்த சட்டங்களில் தான் இதுவரை மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டு வந்தன. அனால் இந்த 3 குற்றவியல் சட்டங்களின் பெயர்களும், வழக்கின் பிரிவுகளும், தண்டனைகள் மற்றும் விசாரணை முறைகள், ஆதாரங்கள் சேகரிப்பு , ஜாமீன் முறை என அடியோடு மாற்றப்பட்டுள்ளன.. அதற்கு பதிலாக பாரதிய என்ற பெயரில் 3 குற்றவியல் சட்டங்களையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது..

 India’s new hit-and-run law put on hold by The central government : do you know why?

1860ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனை சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ளது. இதேபோல் 1872ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய ஆதார சட்டம் பாரதிய சாக்சியா (இரண்டாவது) என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ளது இதேபோல் 1898ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம், பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ளது

புதிய சட்டங்கள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடும் அமளிக்கு நடுவே பெரிய அளவில் விவாதங்கள் ஏதும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இந்த குற்றவியல் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டிசம்பர் 25 அன்று ஒப்புதல் அளித்தார். இதனிடையே கடந்த மாதம், அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் (UTs) புதிய குற்றவியல் சட்டங்களை விரைவில் நடைமுறைக்கு கெண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.

இந்நிலையில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேநேர வெள்ளிக்கிழமை பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் ஹிட் அண்ட் ரன் வழக்குகளில் புதிய தண்டனை விதியை நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளது.

“பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (45 of 2023) இன் பிரிவு 106 இன் துணைப்பிரிவு (2) இன் விதியைத் தவிர மற்ற சன்ஹிதாவின் விதிகள் ஜுலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளளது. கடந்த ஜனவரி மாதம், பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் ஹிட் அண்ட் ரன் வழக்குகளுக்கு எதிராக தண்டனைகளுக்கு எதிராக நாடு முழுவதும் போக்குவரத்து சங்கங்கள் போராட்டம் நடத்தின.

இந்த புதிய சட்டப்படி , அவசரமாக மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதன் மூலம் ஒரு நபரின் மரணத்தை ஏற்படுத்திவிட்டு, அந்த இடத்தை விட்டு தப்பி ஓடினால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் மற்றும் 7 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று இருந்தது.

இந்தியாவை பொறுத்தவரை தற்போது நீண்ட வாகனம் ஓட்டும் நேரம் இருக்கிறது. பல இடங்களில் கடினமான சாலைகள் இருக்கிறது. இந்த சூழலில் டிரைவர் பணி என்பது சவாலானது என்றும், மூடுபனி, மோசமான வானிலை, எதிர்பாராத நிகழ்வுகள், வாகனம் கட்டுப்பாட்டை இழப்பது போன்ற ஓட்டுநரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் விபத்துக்கள் ஏற்படலாம் என்றும் அப்படி விபத்து நடந்த போது, காயம்பட்டவர்களுக்கு உதவ வாகனங்களை நிறுத்தும் போது, ​​ஓட்டுனர்களுக்கு எதிரான கும்பல் வன்முறைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்த சட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து இறங்கி வந்த மத்திய அரசு, அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸுடன் (AIMTC) கலந்தாலோசித்த பின்னரே பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் கடுமையான விதிகளை அமல்படுத்துவது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது.

ஹிட் அண்ட் ரன் வழக்குகளில் கடுமையான நடவடிக்கை அவசியம் என்றாலும், புதிய சட்டத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டிய பல குறைபாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த காரணத்தால், அந்த சட்டத்தின் கீழ் தண்டனை அளிப்பதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது

இதுனிடையே நாடு முழுவதும் புதிய சட்டங்களை "மண்டல வாரியாக" செயல்படுத்த காவல்துறை அதிகாரிகள், புலனாய்வாளர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கும் 3,000 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. தடயவியல் சான்றுகள் விவகாரத்தில் பயிற்சி இருக்கும் என்றும் சண்டிகரில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த மாதம், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அனைத்து காவல்துறை இயக்குனர்களுடன் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். சட்டங்களை அமல்படுத்தும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உடனடியாக உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.. மேலும் புதிய சட்டங்களை அமல்படுத்தும் போது விரிவான ஆய்வுகள் செய்ய வேண்டும் என்றும், அவரவர் மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களுடன் தேவையான ஆலோசனைகளை நடத்த வேண்டும் என்றும் உள்துறை செயலாளர் அறிவுறுத்தி இருந்தார்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+