இண்டிகோவுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதோ.. திருவனந்தபுரம்-பெங்களூர் விமானத்தில் தீ விபத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஏர்போர்ட்டில் பயணியை தாக்கிய இன்டிகோ ஊழியர்கள்- வீடியோ

  பெங்களூர்: திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் சென்ற இண்டிகோ விமானம் ஒன்று தீ விபத்து காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. சாதாரண ஓடுதளத்தில் இறங்க வேண்டிய அந்த விமானம் அவசர ஓடுதளத்தில் இறக்கப்பட்டது.

  இதே நாளில் லக்னோவில் இண்டிகோ ஊழியர் செய்த தவறு காரணமாக சக்கர நாற்காலியில் இருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் கீழே விழுந்து இருக்கிறார்.

  தொடர்ந்து ஒரு வாரமாக இண்டிகோ நிறுவன விமானங்களில் நிறைய பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் அந்த நிறுவன ஊழியர் ஒருவர் பயணி ஒருவரை மோசமாக தாக்கினார்.

  சிந்துவுக்கு பிரச்சனை

  சில நாட்களுக்கு முன் பாட்மிட்டன் வீரர் பிவி சிந்து டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்று இருக்கிறார். அப்போது அவர் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தின் ஊழியர் ஒருவர் அவரை மிகவும் தகாத முறையில் நடத்தி இருக்கிறார். அஜிதேஷ் என்ற பெயர் கொண்ட அந்த விமான ஊழியர் சிந்துவை மிகவும் மோசமாக நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பிவி சிந்து இப்போது டிவிட்டரில் இண்டிகோ நிறுவனத்தில் சரியான சர்விஸ் இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

   சண்டையில் ஈடுபட்ட ஊழியர்

  சண்டையில் ஈடுபட்ட ஊழியர்

  சென்னையில் இருந்து இண்டிகோ விமானத்தில் டெல்லி சென்று இருக்கிறார் ராஜூவ் கட்டியால் என்ற நபர். இவர் டெல்லியில் இறங்கிய போது அவரிடம் இண்டிகோ ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இரண்டு இண்டிகோ விமான ஊழியர்கள் சேர்ந்து அந்த பயணியைத் தாக்கி கீழே விழச் செய்து இருக்கின்றனர். இது சில நாள் முன்பு வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இதில் ஊழியர்களின் முரட்டுத்தனத்தை பலரும் கண்டித்து பதிவு செய்து இருந்தனர்.

   ஊழியர் மீண்டும் அத்துமீறல்

  ஊழியர் மீண்டும் அத்துமீறல்

  அதேபோல் இன்று லக்னோவில் விமானத்திற்காக காத்து இருந்த பெண் பயணி ஒருவரை இண்டிகோ ஊழியர்கள் மிகவும் மோசமாக நடத்தி இருக்கின்றனர். மாற்றுத்திறனாளி பெண்ணான அவரை இண்டிகோ ஊழியர் சக்கர நாற்காலியில் அழைத்து சென்று இருக்கிறார். ஆனால் இவர் வண்டியை மோசமாக தள்ளியதில் அந்த பெண் பாதி வழியில் கீழே விழுந்து இருக்கிறார். இதில் அவருக்கு மோசமாக அடிபட்டு இருக்கிறது.

   பாதியில் இறங்கிய விமானம்

  பாதியில் இறங்கிய விமானம்

  இன்று திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் வந்த இண்டிகோ விமானம் தீ பிடித்ததாக கூறப்பட்டதால் வேகமாக தரையிறக்கப்பட்டது. சாதரண ஓடுதளத்தில் இறங்க வேண்டிய அந்த விமானம் அவசர ஓடுதளத்தில் இறக்கப்பட்டது. மேலும் அங்கு இருந்து இண்டிகோ ஊழியர் ஒருவரின் லேப்டாப்பில் இருந்த வந்த புகைதான் பதட்டத்திற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

   மீண்டும் மன்னிப்பு கேட்ட இண்டிகோ

  மீண்டும் மன்னிப்பு கேட்ட இண்டிகோ

  ஒரே வாரத்தில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக இண்டிகோ நிறுவனம் இப்படி பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. கடத்த மூன்று சம்பவங்களுக்கும் இண்டிகோ நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது. அதேபோல் கடைசியாக நடந்த தீ விபத்து சம்பவத்திற்கும் அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டு இருக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Indigo flight took a emergency land due to fire. In this same day a passenge fell-off from her wheelchair while being assisted by IndiGo staff.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற