இந்தியா - பாகிஸ்தான் பயங்கர துப்பாக்கி சண்டை.. எல்லையில் ராணுவ வீரர் பலி - மீண்டும் பதற்றம்
ஜம்மு காஷ்மீர்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் கடந்த மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது. அதன்பிறகு முதல் முதலாக பாகிஸ்தான் தூண்டுதலால் நேற்று இரவு ஜம்மு காஷ்மீரில் இருநாடுகளின் எல்லையில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் நம் நாட்டின் ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7 ம் தேதி நம் நாட்டின் சார்பில் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள், ராணுவ தளம், விமானப்படை தளம் அழிக்கப்பட்டது. பாகிஸ்தானும் பதிலுக்கு தாக்க முயன்று தோற்றுப்போனது.

இதனால் பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. மே 10ம் தேதி நடத்திய தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் போரை நிறுத்த கெஞ்சியது. இதையடுத்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இருப்பினும் ‛ஆபரேஷன் சிந்தூர்' முடியவில்லை. பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டினால் உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று நம் நாடு எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தான் போர் நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக எல்லையில் நேற்று கடும் துப்பாக்கிச்சண்டை நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் உரி செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே நேற்று இரவு வழக்கம்போல் நம் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானில் இருந்து ஒருவர் எல்லையை கடந்து நம் நாட்டுக்குள் ஊடுருவ முயன்றார். இது வழக்கமான ஊடுருவல் முயற்சியில் இருந்து வேறுபட்டு இருந்தது.
ஊடுருவ முயன்ற நபரை நம் ராணுவ வீரர்கள் தடுக்க முயன்றனர். அப்போது பாகிஸ்தான் ராணுவம் நம் நாட்டின் வீரர்கள் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் நம் வீரர்களும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் நம் நாட்டின் வீரர் ஒருவர் காயமடைந்தார். இதற்கிடையே இரவு நேரம் உள்பட மோசமான காலநிலையை பயன்படுத்தி நம் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற நபர் மீண்டும் பாகிஸ்தானுக்கே திரும்பி சென்றார்.
இதற்கிடையே பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நம் ராணுவ வீரர் மரணடைந்தார். இதனால் இருநாடுகள் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்புப் படை மோதல்.. 30 பேர் சுட்டுக்கொலை -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications