For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலை நடந்தா சரி, ஃபேஸ்புக், டிவிட்டரை பயன்படுத்தலாம்: இன்போசிஸ் ஊழியர்களுக்கு சிஇஓ அனுமதி

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: அலுவலகத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றை ஊழியர்கள் பயன்படுத்த இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவான விஷால் சிக்கா அனுமதி அளித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பல விதிமுறைகளை விதித்துள்ளது. வேலை நாட்களில் சில நாட்களில் கட்டாயம் டை கட்டி வர வேண்டும், அலுவலகத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் உள்ளன.

Infosys' New CEO Allows Staff to Use Twitter, Facebook

இன்போசிஸ் நிறுவனத்தில் வியாபாரம் மந்தமாகியுள்ள நிலையில் ஊழியர்கள் ராஜினாமா செய்வதும், உயர் அதிகாரிகள் வேறு நிறுவனங்களுக்கு செல்வதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவன சிஇஓவாக பொறுப்பேற்றுள்ளார். அவர் அலுவலக சூழலை ஊழியர்களுக்கு ஏற்றது போல் மாற்ற விரும்புகிறார்.

இதில் முதல்கட்டமாக ஊழியர்கள் அலுவலகத்தில் ஃபேஸ்புக், ட்விட்டரை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இன்போசிஸ் ஊழியர்கள் அலுவலக நேரத்தில் சமூக வலைதளத்தை பயன்படுத்தலாம். வேலை நடந்தால் சரி ஊழியர்கள் அலுவலகத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தினால் பிரச்சனை இல்லை என்பது சிக்காவின் நினைப்பு.

இது குறித்து ஐடி நிறுவனங்களுக்கு உயர் அதிகாரிகளை பணியமர்த்தும் ஒருவர் கூறுகையில்,

இந்த மாற்றங்கள் பெரிதாக தெரியாது. ஆனால் இது துவக்கம் என்று சிக்கா நினைக்கிறார். பெரிய மாற்றங்கள் வர உள்ளன என்றார்.

English summary
Infosys CEO Vishal Sikka has allowed his employees to use Facebook and Twitter at work but he wants the job done.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X