For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாவரம் ”அசைவம்” சாப்பிடுமா? இந்தியாவில் கண்டுபிடிப்பு.. பூச்சிகளை ரொம்ப பிடிக்குமாம் -சுவாரஸ்ய ஆய்வு

Google Oneindia Tamil News

டேராடூன்: பூச்சி, புழுக்களை சாப்பிடும் அபூர்வமான அசைவ தாவரமான 'உட்ரிகுலேரியா புர்செல்லடா' செடியை உத்தராகண்ட் மாநில வனத்துறை கண்டுபிடித்து இருப்பது உலக புகழ்பெற்ற ஜப்பானிய தாவரவியல் இதழான 'The Journal of Japanese botany' இல் வெளியிடப்பட்டுள்ளது.

106 ஆண்டுகள் பழமையான இந்த இதழ் உலகளவில் உள்ள பல கோடிக்கணக்கான வகை தாவரங்கள் மற்றும் அவற்றின் குணாதிசயங்கள் குறித்து ஆய்வுகளை வெளியிட்டு இருக்கிறது.

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இமய மலையின் மண்டல் பள்ளத்தாக்கில் இந்த அபூர்வ தாவரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

முதல் செடி

முதல் செடி

வனத்துறை சரக அதிகாரி ஹரிஷ் நெகி, இளம் ஆராய்ச்சியாளர் மனோஜ் சிங் ஆகியோர் இதை கண்டுபிடித்து உலகிற்கு தெரியப்படுத்தினர். இதுகுறித்து தலைமை வனப் பாதுகாவலர் சஞ்சீவ் சதுர்வேதி தெரிவிக்கையில், "உத்தராகண்ட் மட்டுமல்ல, மொத்த மேற்கு இமயமலை தொடரிலேயே உயிரினங்களை சாப்பிடும் முதல் தாவரம் இதுதான்.

மனிதர்களால் அச்சுறுத்தல்

மனிதர்களால் அச்சுறுத்தல்

சொல்லப்போனால், கடந்த 1986 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த தாவரம் இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் கிடைக்கவில்லை." என்றார். மண்டல் பள்ளத்தாக்கில் இந்த தாவரம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, மற்ற பகுதிகளில் இது எங்குள்ளது என்பதை ஆய்வு செய்யும் பணியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது. அதே நேரம் சுற்றுலா தளமான இப்பகுதியில் மனிதர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இந்த வகை தாவரங்களுக்கு ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.

எந்தெந்த பூச்சிகளை சாப்பிடும்?

எந்தெந்த பூச்சிகளை சாப்பிடும்?

பேரினமாக கருதப்படும் இந்த தாவரம், பிளாடர்வோர்ட்ஸ் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்த தாவரங்கள் பூச்சிகளை சாப்பிடுவதற்காக அதில் சில பாகங்கள் வளர்ந்திருக்கின்றன. அவை பூச்சிகளை இழுத்து விழுங்குவதற்கு பயன்படுகின்றனர். பூச்சிகள், முட்டைப்புழு எனப்படும் கொசுக்களின் லார்வாக்கள், தட்டான்கள் போன்றவற்றை இவை சாப்பிடும்.

எங்கு வளரும்?

எங்கு வளரும்?

இந்த வகை தாவரங்கள் சுத்தமான நீரிலும், ஈரமான நிலப்பகுதியிலும் வளரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உத்தராகண்ட் மாநிலத்தின் ஆராய்ச்சி ஆலோசனை கமிட்டி பூச்சிகள் சாப்பிடும் தாவரங்களை ஆய்வு செய்வதற்கென்று 2019 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் பயனாகவே இந்த தாவரம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

English summary
Insect eating plant found in Uttarkhand Mandal valley in Himalaya: பூச்சி, புழுக்களை சாப்பிடும் அபூர்வமான அசைவ தாவரமான ’உட்ரிகுலேரியா புர்செல்லடா’ செடியை உத்தராகண்ட் மாநில வனத்துறை கண்டுபிடித்து இருப்பது உலக புகழ்பெற்ற ஜப்பானிய தாவரவியல் இதழான ‘The Journal of Japanese botany’ இல் வெளியிடப்பட்டுள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X