சர்வதேச ஊடகங்களிலும் மெர்சல் விவகாரம்- பாஜகவின் அடாவடி குறித்து பதிவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சர்வதேச ஊடகங்களிலும் மெர்சல் விவகாரம்- பாஜகவின் அடாவடி குறித்து பதிவு!

  டெல்லி: நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்துக்கு பாஜக தேவையில்லாமல் போர்க்கொடி தூக்கி ஆர்ப்பாட்டம் செய்து வரும் விவகாரம் தேசிய அளவில் மட்டுமல்ல சர்வதேச ஊடகங்களிலும் பேசுபொருளாகி இருக்கிறது.

  மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனை நீக்க வேண்டும் என பாஜக போர்க்கொடி தூக்கி வருகிறது.

  நீக்குவதில் குழப்பம்

  நீக்குவதில் குழப்பம்

  இதையடுத்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் முரளி சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக கூறியிருந்தார். ஆனால் தயாரிப்பாளர் தரப்பினராகிய ஹேமாவோ, இன்னமும் காட்சிகளை நீக்கவில்லை எனவும் கூறியிருக்கிறார்.

  விவாதப் பொருளானது

  விவாதப் பொருளானது

  மெர்சல் திரைப்படத்துக்கு எதிரான பாஜகவின் இந்த அடாவடிப் போக்கு தேசிய ஊடகங்களிலும் விவாதப் பொருளாகியது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மெர்சல் திரைப்படத்துக்கு பாஜகவின் எதிர்ப்பு தெரிவிப்பதை வன்மையாக கண்டித்தும் உள்ளனர்.

  சர்வதேச ஊடகங்களில்

  சர்வதேச ஊடகங்களில்

  தொடர்ந்தும் தேசிய அளவிலான தலைவர்கள் பாஜகவின் போக்கை விமர்சித்து வருகின்றனர். இப்போது இது சர்வதேச ஊடகங்களிலும் பிரதான செய்தியாகி உள்ளன.

  பாஜகவின் போர்க்கொடி

  பாஜகவின் போர்க்கொடி

  அல் அரேபியா ஊடகத்தின் ஆங்கிலப் பதிப்பில் மெர்சல் படத்துக்கு எதிராக பாஜக போர்க்கொடி தூக்கி இருப்பதும் ராகுல் காந்தி அதை கண்டித்திருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Now International Medias also wrote about the Vijay's Mersal movie issue.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற