For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை இந்தியா வரும் அமீரக இளவரசர்: இந்தியா-யுஏஇ இடையே கையெழுத்தாகும் 16 ஒப்பந்தங்கள்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: அமீரகத்தின் பட்டத்து இளவரசர் நாளை இந்தியா வருகிறார். அவர் வருகையின்போது அணு சக்தி, எண்ணெய், தொழில்நுட்பம், ரயில்வே உள்பட பல்வேறு துறைகளில் இந்தியா-அமீரகம் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நஹ்யான் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அமீரகம் சென்ற 6 மாத காலத்தில் இளவரசர் இந்தியா வருகிறார்.

Investment, counter-terrorism among 16 India-UAE pacts likely

அவர் வருகையின்போது அணு சக்தி, எண்ணெய், தொழில்நுட்பம், ரயில்வே உள்பட பல்வேறு துறைகளில் இந்தியா-அமீரகம் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

இது குறித்து இந்தியாவுக்கான அமீரக தூதர் அகமது அல் பன்னா கூறுகையில்,

இந்தியா-அமீரகம் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. அதில் 12 ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டது. 16 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று நம்புகிறோம். 34 ஆண்டுகள் கழித்து இந்திய பிரதமர் அமீரகம் வந்துள்ளார். இந்நிலையில் இளவரசரின் வருகை இந்தியா-அமீரகம் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும்.

இருநாடுகளுக்கு இடையேயான உறவு அடுத்த கட்டத்தை அடையும். தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியா-அமீரகம் கூட்டாக செயல்படும் என்றார்.

இது பற்றி இந்தியாவுக்கான முன்னாள் அமீரக தூதர் மிர்சா ஹுசைன் அல் சயேக் கூறுகையில்,

அமீரகத்தின் வெற்றிக்கு மூன்று தூண்கள் உள்ளன. அதில் ஒரு தூண் இந்திய சமூகத்தினர். கடந்த 116 ஆண்டுகளாக இந்தியா, அமீரகம் இடையே நல்லுறவு உள்ளது என்றார்.

English summary
At least 16 pacts in a wide range of sectors like nuclear energy, oil, IT, aerospace and railways, facilitating billions of dollars of investment by UAE in India, are likely to be inked during the visit of His Highness Shaikh Mohammad Bin Zayed Al Nahyan, Crown Prince of Abu Dhabi and Deputy Supreme Commander of the UAE Armed Forces, to India here beginning Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X