For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை: ஐபிஎல் வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்க ராஜீவ் சுக்லா மத்திய அரசிடம் கோரிக்கை

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஐபிஎல் வீரர்களுக்கு பாதுகாப்பு கோரி மத்திய அரசிடம் கோரிக்கை- வீடியோ

    சென்னை: ஐபிஎல் வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்க ராஜீவ் சுக்லா மத்திய அரசிடம் கோரிக்கை

    சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் வீரர்களுக்கும், போட்டிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

    IPL Chief Rajiv Sukla requested to give full protection for players

    டெல்லி: சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா மத்திய உள்துறை செயலாளரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தக் கூடாது என்று தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது.

    மீறி நடத்தினால் வீரர்களுக்கு நடக்கும் அசம்பாவிதங்களுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அரசியல் கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

    இன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது. இதற்காக பிரதமருக்கு அளிக்கும் வகையில் வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டி பாதுகாப்பு பணியில் 4000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்து சென்னையில் ஐபிஎல் வீரர்களுக்கும் போட்டிக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுகுறித்து ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம கூறுகையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி அளிக்கின்றன. முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று உள்துறை செயலாளர் உறுதி அளித்ததாக சுக்லா தெரிவித்தார்.

    English summary
    IPL Chief Rajiv Sukla meets Hone secretary to demand full protection for Chennai IPL matches and players.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X