போதையில் இருந்தால் இப்படித்தான்.. மோடியை கலாய்த்த குத்து ரம்யா.. பாஜக கொந்தளிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  எங்கள் ஆட்சியில் தக்காளி வெங்காயத்திற்குத்தான் முன்னுரிமை- மோடி- வீடியோ

  பெங்களூர்: இந்தியா முழுக்க கர்நாடக தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருபெரும் தேசிய கட்சிகளும் இப்போதே கர்நாடக மாநில தேர்தலுக்கு தயாராகிவிட்டது.

  நேற்று பிரதமர் மோடி கர்நாடகா வந்து சென்றதில் இருந்து இந்த பிரச்சனை அதிகம் ஆகி இருக்கிறது. நேற்று சித்தராமையாவும், எடியூரப்பாவும் டிவிட்டரில் சண்டை போட்டு இருக்கிறார்கள்.

  இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் உறுப்பினர் திவ்யா ஸ்பந்தனா டிவிட்டரில் மோடி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது மிகவும் வைரல் ஆகியுள்ளது.

  டாப் கருத்து

  டாப் கருத்து

  தேர்தலை முன்னிட்டு நேற்று பிரதமர் மோடி பெங்களூர் வந்து இருந்தார். இதில் பேசிய மோடி ''எப்போதும் பழங்கள், காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தக்காளி, வெங்காயம், உருளை சாகுபடிக்கு 'டாப்' முன்னுரிமை கொடுக்கப்படும்'' என்று காய்கறிகளின் ஆங்கில முதல் எழுத்துக்களை வைத்து பேசினார்.

  பதில்

  இதற்கு திவ்யா ஸ்பந்தனா டிவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் ''போதையில் இருக்கும் போது பேசினால் இப்படித்தான் நடக்கும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். டாப் என்ற வார்த்தையை அப்படியே 'போட்' என்று திருப்பி எழுதி உள்ளார்.

  அவர்கள் இப்படித்தான்

  இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக சமூகவலைத்தள குழுவை சேர்ந்த அமித் மால்வியா ''திவ்யாவின் பேச்சை கேட்டுக் கொண்டு ராகுல் காந்தி அமைதியாக இருப்பாரா என்று பார்க்கலாம். இல்லை மோடி குறித்து தவறாக பேசிய மணி சங்கர் ஐயர் மீது குஜராத் தேர்தலுக்காக நடவடிக்கை எடுத்தது போல கர்நாடக தேர்தலுக்கு திவ்யா மீது நடவடிக்கை எடுக்கிறாரா என்று பார்க்கலாம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  செய்தி தொடர்பாளர்

  செய்தி தொடர்பாளர்

  அதுபோல் பாஜக செய்தி தொடர்பாளர் ஜி வி எல் நரசிம்மா ராவ் ''திவ்யா என்ன பேசினார் என்பது பலருக்கும் புரியாது. ஆனால் இதுபோன்ற விஷயம் எல்லாம் உங்கள் கட்சியினருக்கு மட்டும்தான் புரியும். நீங்கள் உங்கள் பேச்சின் மூலம் இந்தியாவை அவமானப்படுத்தி விட்டீர்கள். உங்களை நினைத்து ராகுல் மட்டும்தான் பெருமை படுவார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Divya spandana comments on PM Modi's 'TOP' speech in Kartanaka. She says that ‘Is this what happens when you’re on POT’ about Modi speech.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற