1 வருடம் முழுக்க 12 மெகா திட்டங்கள்.. விண்வெளியில் புதிய சாதனை படைக்க இஸ்ரோவின் மாஸ்டர் பிளான்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  விண்வெளியில் புதிய சாதனை படைக்க இஸ்ரோவின் மாஸ்டர் பிளான்- வீடியோ

  டெல்லி: இந்த ஒரு வருடம் முழுக்க மொத்தம் 12 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருக்கிறது.

  மாதம் ஒருமுறை என மொத்தம் 12 திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த 12ல் 3 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவிட்டது. இன்னும் 9,திட்டங்கள் அடுத்தடுத்த மாதங்களில் செயல்படுத்தப்படும்.

  இதில் சந்திராயன் 2 திட்டம் உட்பட பல மெகா திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. இஸ்ரோ எப்போதும் இதுபோல வருடம் முழுக்க விண்வெளி திட்டங்களை செயல்படுத்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் எந்தெந்த திட்டம் எந்த மாதத்தில் முடிவடையும் என்று கூறப்படவில்லை.

  சந்திராயன் 2

  சந்திராயன் 2

  சந்திராயன் திட்டம் ஒன்று வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது சந்திராயன் திட்டம் இரண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த சந்திராயன் மூலம் நிலவில் ரோவர் ஒன்று தரையிறக்கப்படும். இது நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும். இது மே மாதம் ஏவப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

  ஜி சாட் 11 திட்டம்

  ஜி சாட் 11 திட்டம்

  ஜி சாட் 11 திட்டம் ஜூன் மாத இறுதியில் நிறைவேற்றப்படலாம். தொலைத்தொடர்பு துறையில் புதிய அதிவேக அலைவரிசைகளை பெறுவதற்காக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஜி சாட் 11 மூலம் மொபைல் நெட்வொர்க்குகளின் வேகம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு அடுத்த மாதமே ஜிஎஸ்எல்வி 29 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட உள்ளது. இது சாட்டிலைட்டுடனான நம்முடைய தொடர்பை வேகப்படுத்த உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

  ஜி சாட் 7திட்டம்

  ஜி சாட் 7திட்டம்

  இந்த வருடம் அனுப்பப்படும் பெரிய திட்டங்களில் இந்த ஜி சாட் 7 சாட்டிலைட்டும் ஒன்று. இதன் மூலம் ராணுவத் துறைக்கு அதிக பலன் ஏற்படும். ராணுவத்தில் செய்யப்படும் ரகசியம் ஆராய்ச்சிகளுக்கு, தகவல் தொடர்புக்கு இந்த சாட்டிலைட் பயன்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதேபோல் இந்த வருடம் ரைசாட் எனப்படும் ராணுவ துறையில் தகவல் தொடர்புக்கு இன்னொரு சாட்டிலைட் அனுப்பப்பட உள்ளது.

  இன்னும் 4 சாட்டிலைட்

  இன்னும் 4 சாட்டிலைட்

  அடுத்த வருடம் முதல் நான்கு மாதங்களில் இன்னும் 4 புதிய சாட்டிலைட்டுகள் அனுப்பப்பட உள்ளது. இதில் சில தனியார் சாட்டிலைட்டுகளும் அடக்கம். ஜிசாட் வகை சாட்டிலைட்டுகளை நிறைய அனுப்பப்பட உள்ளது. ராணுவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலேயே இதுபோன்ற சாட்டிலைட்டுகள் அதிகம் அனுப்பப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  ISRO's master plan, it will do one great project for every month. It plans to do 12 super project for next 12 months.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற