ஆந்திரா, டெல்லியிலும் சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் ரெய்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகம், கர்நாடகாவில் மட்டுமின்றி ஆந்திரா, டெல்லியிலும் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளேடு, இளவரசி மகன் விவேக்கின் ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் இன்று காலை வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. இதையடுத்து தஞ்சாவூர், மன்னார்குடி, கொடநாடு, பெங்களூருவிலும் சோதனைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின.

IT Raid at Andhra, Delhi

தற்போது நாடு முழுவதும் மொத்தம் 190 இடங்களில் சோதனைகள் நடைபெறுவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகம், கர்நாடகா மட்டுமின்றி ஆந்திரா, டெல்லியிலும் ஐடி சோதனைகள் நடைபெறுகின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The IT raids against Sasikala Family's 10 groups including Jaya TV are in Tamil Nadu, Andhra Pradesh and Delhi, said a senior official.
Please Wait while comments are loading...