இந்தியா வருகிறார் டிரம்ப் மகள் இவாங்கா .. ஹைதராபாத் தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்கிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் வரும் நவம்பர் மாதம் இந்தியாவிற்கு வருகை தருகிறார்.

ஐதராபாத்தில் நவம்பர் 28 முதல் 30 வரை தொழில்முனைவோருக்கான உச்சிமாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்கிறது.

Ivanka to participate in global entreprenuer summit at hyderabad

இந்த குழுவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா தலைமை வகிக்கிறார். அவர் ஐதராபாத் வர உள்ளதாக டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவாங்காவும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய பயணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க பிரதிநிதி என்ற முறையில் #GES2017 மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழில்முனைவோரை சந்திப்பது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் பிரமருடன் கைகுலுக்கும் படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் இவாங்கா வெளியிட்டுள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெறும் தொழில்முனைவோர் கூட்டம் குறித்து மோடி டிரம்ப் இடையில் வெள்ளை மாளிகையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சந்திப்பின் போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதிய தொழில் வாயப்புகளை பெறுவதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

Trump Wife Melania Greets Indian PM Modi at the White House - Oneindia Tamil

அமெரிக்க அதிபரின் மகள் என்பதைத் தாண்டி 35 வயது இவாங்கா, அமெரிக்க அதிபரின் ஆலோசகராகவும் உள்ளார். குழந்தைகளுக்கான பிரச்னைகளை கையாள்வதில் சிறந்த பெண் வழக்கறிஞராக இவாங்கா திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
US President Trump's daughter Ivanka visiting India and participating in the global entreprenuer summit which will be on November 28-30 at Hyderabad.
Please Wait while comments are loading...