ஜம்மு காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு- பெண் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் 45 வயதுடைய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பூஞ்ச் மாவட்டம் மெந்தார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

J&K: Lady dies in cease fire violations, terrorists strike at 41 RR

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஜோரி மாவட்டத்தின் நவுஷேரா செக்டார் பகுதியில் நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகளால் நிலைகள் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலை நடத்தினர்.பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலையடுத்து இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

கடந்த 50 நாட்களில் மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், 9 ராணுவ வீரர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 45 year old lady has lost her life in a ceasefire violation by Pakistan in Jammu and Kashmir. The incident took place at the Medhar sector early Saturday morning.
Please Wait while comments are loading...