இதுதான் ஆந்திரா.. ஒரு படம்.. சந்திரபாபு நாயுடு இமேஜ் டேமேஜ்.. வெளியான "ஜெகன்மோகன் வியூகம்" டிரைலர்
அமராவதி: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் ஆந்திர மாநிலம் சந்திக்க உள்ள நிலையில், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய படம் தயாராகி வருகிறது.
அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியை வீழ்த்தி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் முதல்முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

இந்த நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிகாலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைய இருக்கும் நிலையில், தேர்தலுக்கான பணிகளை இப்போது அம்மாநில கட்சிகள் தொடங்கி இருக்கின்றன. தந்தை ராஜசேகர ரெட்டி வழியில் கடந்த முறை யாத்திரை சென்றே மக்களை கவர்ந்து ஆட்சியை பிடித்த ஜெகன்மோகன் ரெட்டி இம்முறையும் அதையே செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தேர்தலை முன்னிட்டு புதிய முயற்சியை அவர் கையில் எடுத்து இருக்கிறார். அதுதான் சினிமா. தமிழ்நாட்டை போன்றே ஆந்திர பிரதேச அரசியலும் சினிமாவும் பிரிக்க முடியாத ஒன்று. நடிகர் அரசியல்வாதியாவது அங்கு சகஜமான விசயம். என்.டி.ஆர். தொடங்கி சிரஞ்சீவி, பவன் கல்யான் வரை பலரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்.

எனவே சினிமா மூலமாக இந்த தேர்தலில் மக்களை கவர முடிவு செய்து இருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி. இதற்காக தன்னுடைய அரசியல் வாழ்க்கை வரலாற்றை பேசும் திரைப்படத்தை எடுத்து தேர்தலுக்கு முன்பாக வெளியிட அவர் முடிவு செய்தார். முழு நீள அரசியல் படமான இதை பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்க உள்ளார்.
தமிழில் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் படத்தை இயக்கிய ராம்கோபால் வர்மா, தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருகிறார். இந்த படத்திற்கு வியூகம் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. 2 பாகங்களாக தயாராகும் இப்படத்தில் முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி, ஜெகன்மோகன் ரெட்டி, அவரது மனைவி, குடும்பத்தினர், அவரை சுற்றி நடந்த அரசியல் என அனைத்தும் பேசப்பட உள்ளது.

இப்படத்தின் டிரைலர் கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியானது. இதில் ஜெகன்மோகன் ரெட்டியாக கோ படத்தில் வில்லனாக நடித்த அஜ்மல் நடித்து இருக்கிறார். டிரைலரை பார்க்கையில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யான் போன்றோர் வில்லன்களாக காட்சிபடுத்தப்பட்டு உள்ளார்கள். சோனியா காந்தி, மன்மோகன் சிங், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ரோசய்யா, சிரஞ்சீவி போன்றோரது கதாபாத்திரங்களையும் டிரைலரில் காட்டியுள்ளனர். சோனியா காந்தியை வில்லத்தனமாக காட்டியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, ஆந்திர-தெலுங்கானா மாநில பிரிவினையை சோனியா அப்பளத்தை கிழித்து போட்டதுடன் ஒப்பீடு செய்துள்ளது ஒரு காட்சி.
ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் உயிரிழந்தது தொடர்பான காட்சிகளும் அதில் உள்ளன. டிரைலர் வெளியானதில் இருந்து ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியானால் அம்மாநில அரசியல் பெரிய பூகம்பமே வெடிக்கும் என்று பேசப்படுகிறது.
இதுகுறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவிக்கையில், "இந்த படத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் மாமா ஒய்.எஸ்.விவேகானந்தா ரெட்டியின் கொலை பற்றியும் காட்சிகள் இடம்பெற உள்ளன. அந்த கொலையில் குற்றம்சாட்டப்பவரையும் நான் காட்ட உள்ளேன். ஜெகன் மோகன் ரெட்டியின் மனைவி பாரதி ரெட்டியை நான் நெருக்கமாக பார்த்தவன். அவரது கதாபாத்திரமும் படத்தில் உள்ளது.
எனது பார்வையில் இருந்தே இப்படத்தை நான் இயக்குகிறேன். ஆந்திர பிரதேச அரசியல் என்பது சுவாரஸ்யமானது. மாநில அரசியலின் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. நான் ஜெகன்மோகன் ரெட்டியின் ரசிகன். ஆனால், நான் யாருடன் பகைமை பாராட்டுபவன் இல்லை." என்றார். இந்த நிலையில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என தெலுங்கு தேசம் கட்சியினர் போர்க்கொடி தூக்கி உள்ளார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications