உறவில் நெருக்கம்.. இந்தியர்களை போலவே ஆடை அலங்காரத்திற்கு மாறிய ஜப்பான் பிரதமர், மனைவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: இந்தியாவுடன் நல்ல நட்புறவை வைத்துள்ள ஜப்பான் பிரமதர் ஷின்சோ அபே, மோடியை போல கோட் கெட்டப்பில் வந்து அசத்தினார்.

ஷின்சோ அபே, தனது மனைவி அகி அபேயுடன் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல்கட்டமாக இன்று மாலை, குஜராத் தலைநகர் அகமதாபாத் வந்தார்.

வழக்கமான மரபுகளை மீறி விமான நிலையத்திற்கு வரவேற்பு அளிக்க வந்தார் பிரதமர் மோடி. ஷின்சோ அபேவை கட்டியணைத்து அவர் வரவேற்றார். ஜப்பான் பிரதமரை மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோரும் வரவேற்றனர்.

மரபு மாற்றம்

மரபு மாற்றம்

இதன்பிறகு மரபுக்கு மாறாக திறந்த ஜீப்பில் நின்றபடி இரு நாட்டு பிரதமர்களும் 8 கி.மீ பயணித்தனர். அப்போது ஜப்பான் பிரதமர் மற்றும் அவரது மனைவியின் ஆடைகளில் மாற்றத்தை பார்க்க முடிந்தது.

ஆடை மாற்றம்

ஆடை மாற்றம்

குர்தா அணிந்திருந்த ஷின்சோ, அதன் மீது நீல நிற கோட் போட்டிருந்தார். மோடி உட்பட பெரும்பாலான வட இந்திய அரசியல்வாதிகள் இப்படித்தான் ஆடை அணிவது வழக்கம். மேலும், அகி அபே, இந்திய பெண்களை போல சல்வார் கமீஸ் அணிந்திருந்தார்.

நெருக்கம் அதிகரிப்பு

மொத்தத்தில் ஜப்பான் பிரதமர் வருகையின்போது பல்வேறு விஷயங்கள் மரபுக்கு மாறாக, அதேநேரம், இரு நாட்டு உறவில் மிகுந்த நெருக்கம் இருப்பதை வெளிக்காட்டுவதை போல அமைந்திருந்தன.

சீனாவுக்கு எதிர் நிலை

சீனாவுக்கு எதிர் நிலை

சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில், இந்தியா, ஜப்பான் கரம் கோர்த்து செயல்படும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Japan PM Shinzo Abe and his wife dress code changed in India as he wears Coat to in kurta, she wears Salwar.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற