ராகுல் காந்தி பிரதமராக பிராமண பெண் தேவை.. என்ன சொல்ல வருகிறார் தெலுங்கு தேசம் எம்பி?
பிரதமராக வேண்டும் என்றால் ராகுல் காந்திக்கு பிராமண பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம்: பிரதமராக வேண்டும் என்றால் ராகுல் காந்திக்கு பிராமண பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி திவாகர் ரெட்டி தெரிவித்தார்.
தெலுங்கு தேசம் கட்சியின் எம்பியும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான திவாகர் ரெட்டி, விசாகப்பட்டினத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில் நான் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது சோனியாவிடம் ஒரு விஷயத்தை கூறினேன்.

அதாவது 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று ராகுல் பிரதமராக வேண்டும் என்றால் அவருக்கு உத்தரப் பிரதேச பிராமணர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
உ.பி.யை ஆட்சி செய்வதே பிராமணர்கள் சமூகத்தினர்தான். எனவே ஒரு நல்ல பிராமணப் பெண்ணாக பார்த்து ராகுலுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என சோனியாவிடம் ஆலோசனை கூறினேன். ஆனால் அதை அவர் கேட்கவில்லை என்றார்.
ஆந்திரத்தில் அனந்தபூர் மக்களவை தொகுதி உறுப்பினரான ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 6 முறை வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது காங்கிரஸ் சார்பில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.












Click it and Unblock the Notifications