கொச்சி பறக்க முட்டுகட்டை.. காங், மஜத எம்எல்ஏக்களுக்கு விமான போக்குவரத்து இயக்ககம் அனுமதி மறுப்பு!
Recommended Video

பெங்களூர்: எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்படுவதை தவிர்க்க இன்று இரவே காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி தலைமைகள் தங்கள் எம்எல்ஏக்களை கொச்சிக்கு அனுப்ப இருந்தது. ஆனால் காங்கிரஸ்,மஜத எம்எல்ஏக்கள் பெங்களூருவிலிருந்து கொச்சிக்குச் செல்லவிருந்த தனி விமானத்திற்கு மத்திய விமான போக்குவரத்து இயக்ககம் அனுமதி மறுத்துள்ளது.
பெங்களூரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேர விமான பயணத்தில் கொச்சியை சென்றடைய முடியும், அங்கு இடதுசாரிகள் ஆட்சி நடப்பது போன்ற அம்சங்கள், கொச்சியை மஜத தேர்ந்தெடுக்க காரணம். இடதுசாரிகளுடன் நல்ல உறவில் உள்ள மஜத தேசிய தலைவர் தேவகவுடா, ஏற்கனவே பினராயி விஜயனிடம் இதுபற்றி பேசியுள்ளாராம்.

கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளதை பினராயி விஜயன் எதிர்த்து கருத்து கூறியிருந்தார். இந்த நிலையில், அவரும், காங்கிரஸ் மற்றும், மஜத எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை வழங்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்று இரவு எச்ஏஎல் விமான நிலையத்தில் இருந்து காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள், பெங்களூர் புற நகரிலுள்ள ரிசார்ட்டிலிருந்து கொச்சி நோக்கி கிளம்ப உள்ளனர்.
காங்கிரஸ் எம்எல்ஏக்களை கண்காணிக்கும் பொறுப்பு டி.கே.சிவகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. மஜத எம்எல்ஏக்களை பாரூக் கண்காணிக்க உள்ளார். கொச்சியில் 7 ஸ்டார் ஹோட்டலில் இவர்கள் தங்க உள்ளனராம்.
ஆனால் தற்போது காங்கிரஸ்,மஜத எம்எல்ஏக்கள் பெங்களூருவிலிருந்து கொச்சிக்குச் செல்லவிருந்த தனி விமானத்திற்கு மத்திய விமான போக்குவரத்து இயக்ககம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் அவர்கள் கேரளா செல்வது சிக்களாகி உள்ளது.












Click it and Unblock the Notifications