For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகர விளக்கு பூஜை... திருஆபரண இன்று பெட்டி புறப்பாடு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சுவாமி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக திருஆபரண பெட்டி சபரிமலைக்கு இன்று மதியம் கிளம்புகிறது.

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த மாதம் 31ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் சபரிமலையில் குவிய தொடங்கியுள்ளனர். அதிக அளவில் கூட்டம் இருப்பதால் பக்தர்கள் சாமி தரிசனம் முடிய 10 நேரம் காத்திருக்கின்றனர்.

Jewel box procession to Sabarimalai to begin today

பம்பையில் தடுத்து நிறுத்தப்படும் பக்தர்கள் சன்னிதானத்தில் கூட்டம் குறைந்ததும் மேலே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மாலை மறுநாள் மகர விளக்கு பூஜை நடக்கிறது. அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும். இதனை தரிசப்பற்காக பக்தர்கள் இப்போதே சபரிமலையில் குவிய தொடங்கியுள்ளனர். ,

மகர விளக்கு பூஜை சமயத்தில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவி்க்கப்படுவது வழக்கம். இந்த திருஆபரணம் பந்தளத்தில் உள்ள வலிய கோயி்க்கல் தர்ம சாஸ்தா கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 1 மணிக்கு புறப்படும் தங்க அங்கி அங்கிருந்து ஊர்வலமாக ஆரன்மூலா, ஆயிரூர், பிளாப்பள்ளி, நீலக்கல், நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம் வழியாக நாளை மறுநாள் 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு கோயிலை அடையும். இந்த ஊர்வலத்திற்கு சிறப்பான வரவேற்பை அளிக்க தேவசம் போர்டு காத்திருக்கிறது.

இதில் முக்கியமான ஒரு பெட்டி சபரிமலை கோயிலுக்கும், மற்ற 2 பெட்டிகள் மாளிகைபுரம் கோயிலுக்கும் கொண்டு செல்லப்படும். அதன் தங்க அங்கி சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடக்கும்.

அந்த சமயத்தில் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும். மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெரிசல் மூலம் விபத்து ஏற்படாமல் இருக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
Swamy Iyappan's jewel box procession to Sabarimalai to begin today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X