உடலை கவ்விவந்த நாய்.. 22 வயது மனைவியை கொன்று 12 துண்டாக்கிய கணவர்.. ஷ்ரத்தா கொலை போல் அடுத்த ஷாக்
ராஞ்சி: டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வசித்து வந்த ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக உடல் வெட்டப்பட்டது போல் ஜார்கண்டில் 22 வயது நிரம்பிய மனைவியை கொலை செய்து 12 துண்டுகளாக வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையை மறைக்க அவர் மனைவியின் உடல் துண்டுகளை ஆங்காங்கே வீசிய நிலையில் நாய் கவ்வி வந்ததால் சிக்கினார்.
டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தா வால்கரை, அப்தாப் அமீன் கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டிய சம்பவம் நாட்டையை உலுக்கியது. இதன் தொடர்ச்சியாக தொடர்ந்து கொலையை மறைக்க உடலை பல துண்டுகளாக வெட்டும் சம்பவம் ஆங்காங்கே நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
டெல்லியை தொடர்ந்து கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்த நிலையில் தற்போது ஜார்க்கண்டில் நடந்துள்ளது. வெறும 22 வயது நிரம்பிய 2வது மனைவியை கணவரே கொலை செய்து உடலை 12 துண்டுகளாக வெட்டிய கொடூர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

2வது திருமணம்
ஜார்க்கண்ட் மாநிலம் போரியா போலீஸ் எல்லைக்குட்பட்ப சாகிப்காஞ்ச் பகுதியை சேர்ந்தவர் தில்தார் அன்சாரி. திருமணம் ஆனவர். இந்நிலையில் தான் தில்தார் அன்சாரிக்கும், சாகிப்காஞ்ச் பகுதியில் வசித்து வந்த பழங்குடியினத்தை சேர்ந்த 22 வயது நிரம்பிய ரூபிகா பகதீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியது. இதையடுத்து தில்சார் அன்சாரி, ரூபிகாவை 2வது திருமணம் செய்து கொண்டார்.

மாயமான ரூபிகா
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக ரூபிகா வீட்டில் இருந்து மாயமானார். இதுபற்றி தில்சார் அன்சாரி அவரது குடும்பத்தினரிடம் கூறினார். இதையடுத்து குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். பல இடங்களில் ரூபிகாவை போலீசார் தேடினர். மேலும் உறவினர்களிடமும், குடும்பத்தினரிடமும் விசாரித்தனர்.

உடலை கவ்விவந்த நாய்
இந்நிலையில் தான் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் பின்புறத்தில் நாய் ஒன்று உடல் துண்டுகளை கவ்வி எடுத்து வந்தது. இதை பார்த்த கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த உடல் துண்டை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் அது மாயமான ரூபிகாவின் உடலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

சமையலறையில் ரத்தக்கறை
இந்த வேளையில் தில்கார் அன்சாரியின் வீட்டு சமையலறையில் ரத்தக்கறை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாருக்கு தில்கார் அன்சாரி மீதான சந்தேகம் வலுத்தது. அவர் தான் ரூபிகாவை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் நினைத்தனர். இதனால் தில்கார் அன்சாரியை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது.

உடலை 12 துண்டுகளாக்கிய கணவர்
அதாவது தனது 2வது மனைவியை கொலை செய்த தில்கார் அன்சார், அதன்பிறகு எலக்ட்ரிக் கட்டர் கொண்டு அவரது உடலை 12 துண்டுகளாக வெட்டினார். பிறகு கொலையை மறைக்க சாந்தாலி மொமின் தோளா பகுதியில் உள்ள பழைய வீட்டுக்குள் உடலை வைத்தார். அவ்வப்போது உடல் துண்டுகளை ஆங்காங்கே வீசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வெளியே வீசப்பட்ட உடல் துண்டை நாய் கவ்வி வந்த நிலையில் அவர் போலீசில் சிக்கியது தெரியவந்துள்ளது.

உடல் பகுதிகளை தேடும் பணி தீவிரம்
இருப்பினும் கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் தெரிவிக்கவில்லை. ரூபிகாவின் சில உடல் துண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இன்னும் சில பகுதிகள் கிடைக்கவில்லை. அதனை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications