For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாழ்க்கை எனும் ஓடம்.. வழங்குகின்ற பாடம்.. ஹேமந்த் சோரன் கட்சி எம்எல்ஏக்கள் ரிலாக்ஸ்!

Google Oneindia Tamil News

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது அரசியல் பரபரப்புகள் நிலவிவரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது கட்சி எம்எல்ஏக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

தற்போது இவ்வாறு சென்ற எம்எல்ஏக்கள் ஹயாக படகு சவாரி செய்து வருகின்றனர். இது சம்பந்தமான படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அம்மாநில ஆளுநருக்கு சமீபத்தில் பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அமைப்பின் எம்எல்ஏக்களை சோரன் தனி சொகுசு விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

 Jharkhand MLAs take a boat ride amid political turmoil

ஹேமந்த் சோரன் முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2021ல் தனது பெயரில் சுரங்க ஒதுக்கீடு பெற்றார். அவர் தனது பதவியை பயன்படுத்தி சட்டவிரோதமாக சுரங்க உரிமத்தை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது. இது தொடர்பான விசாரணையில் ஹேமந்த் சோரன் சுரங்க ஒதுக்கீடு பெற்றது உறுதியானது. இதில் ரூ.100 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது.

இந்த குற்றச்சாட்டையடுத்து சோரன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் அம்மாநில ஆளுநர் கருத்து கேட்டிருந்தார். தேர்தல் ஆணையமும், சோரன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. இதனையடுத்து ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவி எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சோரன் தனது இல்லத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தினார்.

இதில் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்ற நிலையில், தற்போது இவர்கள் அனைவரையும் பேருந்தில் சொகுசு விடுதிகளுக்கு அழைத்து சென்றுள்ளார். சமீப காலங்களாக எம்எல்ஏக்கள் ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற பின்னர் மற்றொரு கட்சிக்கு சென்றுவிடுவது என்பது பல மாநிலங்களில் அடுத்தடுத்து நடந்துவரும் நிலையில் தற்போது ஜார்க்கண்டிலும் இவ்வாறான நடவடிக்கையை தடுக்க சோரன் எம்எல்ஏக்களை சொகுசு விடுதிக்கு மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எம்எல்ஏக்கள் தற்போது மாநில தலைநகர் ராஞ்சிக்கு 30 கி.மீ தொலைவில் உள்ள குந்தி என்ற இடத்திற்கு அருகே உள்ள லத்ரட்டு அணைக்கு அருகில் உள்ள ஏரியில் படகு சவாரி செய்து வருகின்றனர். இவர்கள் இன்று இரவுக்குள் மீண்டும் சொகுசு விடுதிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 43 எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் உள்ளனர். தற்போதைய சூழல் மேலும் மேசாமடைந்து சோரன் தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்பட்டால் அவரது மனைவி அல்லது அவரது தாயை முதலமைச்சராக மாற்ற சோரன் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
(ஏரிக்கு சுற்றுலா சென்ற ஜார்க்கண்ட் எம்எல்ஏக்கள்): Hemant Soren's government in Jharkhand faces the threat of the Chief Minister being disqualified from the assembly following a recommendation by the Election Commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X