டெல்லி ஐ.டி. ஊழியர் ஜிகிஷா கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு.. 2 பேருக்கு தூக்கு தண்டனை
டெல்லி: டெல்லியில் கடந்த 2009ம் ஆண்டு ஐ.டி. பெண் ஊழியர் ஜிகிஷா கோஷ் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொலை, கடத்தல், உள்ளிட்ட குற்றங்களுக்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி, ரவி கபூர், அமித் சுக்லா மற்றும் பாலாஜி சிங் மாலிக் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு, கபூர் மற்றும் சுக்லாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

டெல்லியில் தனியார் ஐ.டி நிறுவனத்தில் செயல் அதிகாரியாக பணியாற்றியவர் ஜிகிஷா கோஷ் (28). கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி பணி முடிந்து நிறுவனத்தின் கால் டாக்சியில் தெற்கு டெல்லியின் வசந்த் விகாரில் உள்ள தனது வீட்டருகே அதிகாலை 4 மணிக்கு வந்திறங்கினார். அதன் பிறகு, அவர் மாயமானார்.
கடத்தப்பட்ட ஜிகிஷா 3 நாட்களுக்குப் பிறகு ஹாரியானா மாநிலம் சூரஜ்குண்ட் அருகே புதருக்குள் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். தீவிர விசாரணைக்குப் பின்னர், இது தொடர்பாக அமித் சுக்லா, பல்ஜித் சிங் மாலிக், ரவி கபூர் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடிப்பதற்காக இந்த கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தலைநகர் டெல்லியை உலுக்கிய முக்கிய வழக்குகளில் ஒன்றாக விளங்கிய இந்த வழக்கு தொடர்பாக பிடிபட்ட 3 பேர் மீதும் கொலை, கொள்ளை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
2009, ஜூனில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை 2010 ஏப்ரல் மாதம் தொடங்கியது. இறுதி வாதம் கடந்த ஜூலை 5ம் தேதி முடிந்தது. அமித் சுக்லா, பல்ஜித் சிங் மாலிக், ரவி கபூர் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில், குற்றவாளிகளுக்கு தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. ரவிகபூர், அமித் சுக்லாவுக்கு மரண தண்டனையும், பல்ஜீத் மாலிக்குக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications