நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கட்சி தொடங்கினாலும் ஏற்க கூடாது.... பிரகாஷ் ராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் யாராக இருந்தாலும் நடிகர்கள் கட்சி தொடங்கினால் ஏற்கக் கூடாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பகிரங்கமாக கூறியுள்ளார்.

பெங்களூருவில் பிரகாஷ் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Just popularity not enough for politics, says Prakash Raj

நடிகர்கள் யாரும் எனக்கு எதிரி இல்லை. யாரையும் நான் குறைத்தும் மதிப்பிடவும் இல்லை.

அதேநேரத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், உபேந்திரா, பவன் கல்யாண் என யாராக இருந்தாலும் கட்சி தொடங்குவதை ஏற்க முடியாது. மக்களிடம் நம்பிக்கையைப் பெற்ற பின்னர்தான் அரசியலுக்கு வர வேண்டும்.

நடிகர்கள் என்ற தகுதியுடன் மட்டுமே அரசியலுக்கு வருவது என்பது நாட்டுக்குப் பேரழிவு.

இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Prakash Raj said actors should not take to politics only because they are popular.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற