தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் மேகி விற்பனைக்கு தடை! உற்பத்திக்கும் பிரேக்!!
பெங்களூர்: தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும், மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் யூ.டி.காதர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

மேகி நூடுல்சில் கெடுதி விளைவிக்கும் மூலப்பொருள் இருப்பதாக சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. சில ஆய்வுகள் பயப்பட தேவையில்லை என்கின்றன. எனவே, கர்நாடகாவில் மேகி நூடுல்ஸ்சுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மேகி பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு நூடுல்ஸ் உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உறுதியாக மேகியில் கெடுதல் இல்லை என்பது தெரியவந்த பிறகு தடை விலக்கப்படும் என்றார்.
கர்நாடகாவிலுள்ள சில்லரை விற்பனை கடைகளிலும் மேகி அப்புறப்படுத்தப்பட வேண்டும். எங்கும் விற்பனை செய்வது கூடாது. இதை உணவுத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு காதர் கூறினார்.












Click it and Unblock the Notifications