For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடித்து நொறுக்கிய மழை.. வாக்குப் பதிவு அதோ கதியானது.. ஹூப்ளியில் சுவாரஸ்யம்!

கர்நாடகாவில் ஹூப்ளியில் மழை பெய்து வருவதால் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்:கர்நாடகாவில் ஹூப்ளியில் மழை பெய்து வருவதால் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டு இருக்கிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

Karnataka Election: Rain in Hubli affecting voting, amidst low polling percentage

ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை ஒரே வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதால், ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது 3 மணி வரை 56 சதவிகித ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது. தேர்தல் ஆணையம் நினைத்ததை விட இது கொஞ்சம் குறைவான வாக்குப்பதிவுதான். தற்போது வாக்குபதிவிற்கு இடையூராக மழையும் தொடங்கியுள்ளது.

கர்நாடகாவில் ஹூப்ளியில் மழை பெய்து வருவதால் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் தற்காலிகமாக கடைகள், வீடுகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். வாக்களிக்க புதிய மக்கள் வராததால் தற்போது வார்ட் எண் 185ல் தற்காலிகமாக வாக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கர்நாடகாவில், மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இந்த மழை கண்டிப்பாக வாக்குப்பதிவை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

English summary
Karnataka Election: Rain lashed parts of Hubli affecting voting, voters take shelter at Polling Station 185.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X