கர்நாடகா: தமிழர்கள் வாழும் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு முன்னிலை.. தாமரை மலரவில்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடகாவில் தமிழர்கள் வாழும் தொகுதியில் தாமரை மலரவில்லை- வீடியோ

  பெங்களூர்: கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், தமிழர்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் கட்சியே தற்போது முன்னிலை வகிக்கிறது.

  கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி உள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில் பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

  Karnataka Election Results: Congress is leading in most of the Tamil Peoples constituencies

  இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகிக்க தொடங்கி உள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 90க்கும் அதிகமான இடங்களில் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 80+ இடங்களுடன் காங்கிரஸ் பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

  இந்த நிலையில் கர்நாடகாவில் தமிழர்கள் இருக்கும் தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் கட்சியே தற்போது முன்னிலை வகிக்கிறது. தமிழர்கள் அதிகம் இருக்கும் கர்நாடகாவின் பெங்களூரில் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகிக்கிறது.

  காந்தி நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினேஷ் குண்டு ராவ் முன்னிலை வகிக்கிறார். சி வி ராமன் நகரில் பாஜக கட்சியின் எஸ் ராகு முன்னிலை வகிக்கிறார். சாந்தி நகரில் காங்கிரஸ் கட்சியின் என் எ ஹாரிஸ் முன்னிலை வகிக்கிறார்.

  புலிகேசி நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகந்த ஸ்ரீனிவாச மூர்த்தி முன்னிலை வகிக்கிறார். சர்வக்ஞா நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜார்ஜ் முன்னிலை வகிக்கிறார். அதேபோல் சிவாஜி நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோஷன் முன்னிலை வகிக்கிறார். மேலும் தமிழர்கள் அதிகம் இருக்கும் சிக்பேட் பகுதியில் பாஜக கட்சியின் உதய் பி கருடாச்சார் முன்னிலை வகிக்கிறார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Karnataka Election Results: Congress is leading in most of the Tamil People's constituencies.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற