வடஇந்திய தலைவர்களை இறக்குமதி செய்யும் பாஜக.. எடியூரப்பாவை வம்பிழுக்கும் சித்தராமையா!

கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்திற்காக மோடி, யோகி ஆதித்யநாத் போன்ற வடஇந்திய தலைவர்களை களமிறக்குவதன் மூலம், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எடியூரப்பாவை ''டம்மி'' ஆன நபராக மாற்றிவிட்டார்கள் என்று சித்தராமையா கிண

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்திற்காக மோடி, யோகி ஆதித்யநாத் போன்ற வடஇந்திய தலைவர்களை களமிறக்குவதன் மூலம், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எடியூரப்பாவை ''டம்மி'' ஆன நபராக மாற்றிவிட்டார்கள் என்று சித்தராமையா கிண்டல் செய்து இருக்கிறார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.

Karnataka Elections 2018: BJP is waiting for North Indian imports like Modi, Adityanath says, Siddaramaiah

இந்த நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக இதுவரை பாஜக, காங்கிரஸ் போன்ற எல்லா கட்சிகளும் வேட்பாளரை அறிவித்து, வேட்புமனு தாக்கலும் செய்துவிட்டது. கர்நாடகாவில் மாநில தலைவர்கள் மட்டுமில்லாமல் தேசிய தலைவர்கள் பலரும் வந்து பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

முக்கியமாக பாஜக சார்பாக கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் வந்துள்ளனர். அதேபோல் தமிழகத்தில் இருந்து எச்.ராஜா போன்ற பாஜகவினர் சென்று இருக்கிறார்கள்.

இதை கர்நாடக முதல்வர் சித்தராமையா கிண்டல் செய்து ''பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் போன்ற வடஇந்தியா பாஜகவினரை இறக்குமதி செய்ய கர்நாடக பாஜக காத்திருப்பதன் மூலம், இங்கு அவர்களுக்கு தலைவர்களே இல்லை என்பதை நிரூபணம் செய்துள்ளார்கள். அவர்களின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை டம்மியாக்கி இருக்கிறார்கள்'' என்று கிண்டல் செய்து இருக்கிறார்.

இவரது இந்த டிவிட்டால் கர்நாடக தேர்தல் களம் இன்னும் சூடாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+