For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகா தேர்தல் 2018: பாஜகவின் 4ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது!

கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக கட்சியின் நான்காம் வேட்பாளர் பட்டியலில் வெளியாகி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக கட்சியின் நான்காம் வேட்பாளர் பட்டியலில் வெளியாகி உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.

Karnataka Elections 2018: BJP releases the fourth list of candidates

இந்த நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக இதுவரை பாஜக நான்கு கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக 72 பேர் கொண்ட பட்டியல் வெளியானது. அதன்பின் 82 பேர் கொண்ட 2வது பட்டியலை வெளியிடப்பட்டது. அதன்பின் 9 பேர் கொண்ட 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது பாஜக கட்சியின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலில் வெளியாகி உள்ளது. 7 பேர் கொண்ட 4ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. ஆனால் இன்னும் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் முழுமையடையாமல் இருக்கிறது. இன்னும் 4 இடங்களுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

பாஜகவை சேர்ந்த லாலேஷ் ரெட்டி பிடிஎம் லே அவுட் தொகுதியில் போட்டியிடுகிறார். இதில் எடியூரப்பாவின் மகன் ராகேவேந்திராவிற்கு இன்னும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சித்தராமையா மகன் யதீந்திரா போட்டியிடும் வருணா தொகுதியில் ராகேவேந்திராவிற்கு வாய்ப்பு அழைக்கப்படலாம் என்று கூறப்பட்டதை எடியூரப்பா மறுத்துள்ளார். நாளைதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bharatiya Janata Party (BJP) released the fourth list of its seven candidates on Monday. The saffron party announced 72 candidates in the first list and 82 candidates in the second list and 59 candidates in the third list. Actor-turned-politician Jageesh ticket to contest from Yeshvanthapura. The party is yet to announce candidates for four constituencies, including Varuna and Badami.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X