For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரியில் தமிழகத்திற்கான ஜூலை மாத பங்கை திறந்து விடுங்கள்.. கர்நாடகாவிற்கு ஆணையம் அதிரடி உத்தரவு

ஜூலை மாதத்திற்காக தமிழகத்திற்கு 34 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்திற்கு இந்த மாதம் 34 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்- வீடியோ

    டெல்லி: காவிரியில் தமிழகத்திற்கான ஜூலை மாத பங்கை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    முதல் காவிரி ஆணைய கூட்டம் டெல்லியில் நடந்து முடிந்துள்ளது. ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. தமிழக பிரதிநிதியான பொதுப்பணி முதன்மை செயலாளர் பிரபாகர் கூட்டத்தில் பங்கேற்றார்.

    Karnataka should give 30 TMC of water in this month orders Cauvery Management Authority

    மேலும் திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் கூட்டத்தில் கலந்து கொண்டார்.இதில் தமிழக அரசு மிக முக்கியமான சில கோரிக்கைகளை வைத்தது. கடந்த மாதம் போலவே கர்நாடக அரசு தொடர்ந்து நீர் திறக்க ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தியது.

    ஜூலை-ஆகஸ்ட்டில் 80 டிஎம்சி நீரை கர்நாடகா திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதில் ஜூலையில் மட்டும் 34 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.

    இந்த காவிரி ஆணைய கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.இதில் தமிழக அரசின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழகத்திற்கு இந்த ஜூலை மாதத்திற்கான தண்ணீர் பங்கை திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டுள்ளது.

    அதன்படி ஜூலை மாதம் 31.24 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் நேற்று முடிவாகி உள்ளது. ஆனால் நேரடியாக இத்தனை டிஎம்சி திறக்க வேண்டும் ஆணையம் அறிவிப்பு வெளியிடவில்லை. வெறுமனே இந்த ஜூலை மாதத்திற்காக நடுவண் நீதிமன்றம் பிறப்பித்த தண்ணீர் அளவை திறந்துவிட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

    முறைப்படி ஜூலை மாதத்திற்காக தமிழகத்திற்கு 34 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் ஜூன் மாதம் வழங்க வேண்டிய நீரை விட அதிக நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதனால் ஜூலை மாதம் 31.24 டிஎம்சி திறக்க வேண்டும் என்று முடிவாகி உள்ளது.

    ஆகஸ்ட் மாதத்திற்கான தண்ணீர் குறித்து அடுத்த மாத கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இனி இரண்டாவது கூட்டம் அடுத்த மாதம் கூடும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Karnataka should give 30 TMC of water in this month orders Cauvery Management Authority in the first-ever meeting which held in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X