Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடக நகர உள்ளாட்சி தேர்தல்: மாநகராட்சிகளை கைப்பற்றிய பாஜக.. கிராமங்களில் காங்கிரஸ் கொடி

கர்நாடகாவில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

கர்நாடகாவில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

பெங்களூர்: கர்நாடகாவில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மாநகராட்சிகளில் எல்லாம் பாஜக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மாறாக மற்ற கிராமம், நகரம் எல்லாவற்றிலும் காங்கிரஸ் வென்றுள்ளது.

கர்நாடக நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின் படி காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

2474 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 2709 வார்டுகளுக்கு முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. வார்டு வாரியாக காங்கிரஸ் கட்சி 925 இடங்களிலும், பாஜக 861 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 337 இடங்களிலும் வென்றுள்ளது.

மாநகராட்சி - நகரம் - கிராமம்

மாநகராட்சி - நகரம் - கிராமம்

105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. மைசூரு, துமகூரு, ஷிமோகா ஆகிய 3 மாநகராட்சிகளுக்கும் இந்த தேர்தல் நடந்தது. மைசூரு, துமகூரு, ஷிமோகா ஆகிய 3 மாநகராட்சியில் பாஜக முன்னிலை வகிக்கிறது. சிட்டி கவுன்சிலில் பாஜக 9 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 14 இடங்களில் வென்றுள்ளது. மத சார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களில் வென்றுள்ளது. டவுன் கவுன்சிலில் பாஜக 12 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 26 இடங்களில் வென்றுள்ளது. மத சார்பற்ற ஜனதா தளம் 8 இடங்களில் வென்றுள்ளது. டவுன் பஞ்சாயத்தில் பாஜக 8 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 9 இடங்களில் வென்றுள்ளது. மத சார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களில் வென்றுள்ளது. மூன்றிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

ஷிமோகா முடிவு

ஷிமோகா முடிவு

பாஜகவின் பலமான கோட்டையான ஷிமோகாவில் பாஜகவே அதிக இடங்களில் வென்றுள்ளது. இங்கு பாஜக 20 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 7 இடங்களில் வென்றுள்ளது. மத சார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களில் வென்றுள்ளது. மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களில் வென்றுள்ளனர்.

மைசூர் முடிவு

மைசூர் முடிவு

அதே சமயம் மைசூரில் பாஜகவின் வெற்றி உறுதியாகி உள்ளது. இன்னும் முடிவு மட்டுமே அங்கு அறிவிக்கப்படவில்லை. இங்கு பாஜக 22 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 19இடங்களில் வென்றுள்ளது. மத சார்பற்ற ஜனதா தளம் 18 இடங்களில் வென்றுள்ளது. மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களில் வென்றுள்ளனர்.

தும்கூர் முடிவு

தும்கூர் முடிவு

அதேபோல் தும்கூருவில் பாஜகவே முன்னிலை வகிக்கிறது. ஆனால் பெரிய அளவில் அங்கு வாக்கு வித்தியாசம் பெறவில்லைஇ. இங்கு பாஜக 12 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 10 இடங்களில் வென்றுள்ளது. மத சார்பற்ற ஜனதா தளம் 10 இடங்களில் வென்றுள்ளது. மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் வென்றுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+