பேஸ்புக்கில் ஆதரவாளர்களை வேகமாக இழக்கும் கெஜ்ரிவால்!
டெல்லி: டெல்லியில் தொடர் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதாக அவரது பேஸ்புக் விவரம் தெரிவிக்கிறது.
பேஸ்புக்கில் அவருக்கு இருந்து வந்த பாலோயர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறதாம்.
கெஜ்ரிவால் மேற்கொண்டு வரும் அரசியல் ஸ்டைல் பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் இறங்குமுகம்
பேஸ்புக்கில் தற்போது கெஜ்ரிவாலுக்கு இறங்குமுகம்தான். அவரது பாலோயர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

12ம் தேதி முதல்
அதாவது 12ம் தேதி முதல் இன்று வரை அவரது பேஸ்புக் பாலோயர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் அது தெரிய வரும். 12ம் தேதியன்று அவரது பாலோயர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 60 ஆயிரம் வரை இருந்தது.

உச்சத்தைத் தொட்ட 13
13ம் தேதி இது சற்று உச்சத்தைத் தொட்டது. அதாவது 68,886 பேர் இருந்தனர்.

14ம் தேதி டவுன் ஆயிருச்சே
ஆனால் 14ம் தேதி முதல் இது டவுனுக்கு வரத் தொடங்கியது. 14ம் தேதி நிலவரப்படி 61,232 பேர் இருந்தனர். 20ம் தேதி இது கிட்டத்தட்ட பாதியாக குறைந்து போய் விட்டது. அதாவது 22,962 ஆக குறைந்து போய் விட்டது.

இன்று ரொம்ப மோசம்
இன்றோ இது மேலும் அடி வாங்கி 15,308 என்று வந்து நிற்கிறது.
பேஸ்புக்கை மட்டும் வைத்து எதையும் கணக்கில் கொள்ள முடியாது என்றாலும் கூட பேஸ்புக்கிலேயே ஆதரவு குறைந்து விட்டதே என்று ஒரு பிரசாரம் கிளம்புவதையும் தவிர்க்க முடியாது இல்லையா....?


Click it and Unblock the Notifications
