For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Kerala Govt. to dismiss 1300 Tamil teachers from schools
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தமிழாசிரியர்களாக பணிபுரிந்து வந்த 1300 பேரை, அம்மாநில அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் தேக்கடி உள்ளிட்ட தமிழர்கள் அதிமாக வாழும் பகுதிகளில், தமிழ் குழந்தைகள் தமிழ் கற்கும் வகையில், அங்கு வாழும் தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்க அம்மாநில அரசு 1300 தமிழாசிரியர்களை நியமித்தது.

இப்போது இவர்கள் அத்தனை பேரையும் உடனடி பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது அம்மாநில அரசு. இதற்கு கால அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்வழி பள்ளிக் கூடங்களில் பணியாற்ற தேவையான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் இப்போது 1300 தமிழ் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்துள்ளது கேரளா அரசு.

கேரள அரசின் இந்த திடீர் உத்தரவால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமின்றி, அங்கு வாழும் மக்களும் தங்களின் குழந்தைகளின் நிலையை எண்ணி அதிர்ச்சியில் உள்ளனர்.

திடீரென்று தமிழ் ஆசிரியர்களை வேலையில் இருந்து நீக்கினால் பிள்ளைகளின் நிலை என்னாவது ? ஆசிரியர்களின் வாழ்வாதாரம் என்னாவது ? இதை பற்றி சிறுதும் கவலைப்படாமல் இப்படியான செயலை செய்துள்ளது கேரளா அரசு.

தமிழக அரசு கேரளாவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக குரல் கொடுக்க வேண்டும். கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்ந்த வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

English summary
Kerala Government dismisses around 1300 Tamil teachers working with government schools in Iduki district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X