நாட்டிலேயே அதிக இறப்பு.. மிரள வைக்கும் கேரளா.. ஒரு வாரத்தில் ஒரு மில்லியனுக்கு 24 பேர் மரணம்!

Subscribe to Oneindia Tamil

கொச்சி: கேரளா தான் இப்போது நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பை சந்தித்து வருகிறது. அதேபோல் ஒரு மில்லியன் மக்கள் தொகையுடன் இறப்பை கணக்கிட்டு பார்த்தால், நாட்டிலேயே கேரள மாநிலம் மட்டும் தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.

அதாவது ஜூலை 25 மற்றும் 31 க்கு இடையிலான ஒரு வாரத்தில் கேரளா ஒரு மில்லியனுக்கு 24 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. ஆனால் மகாராஷ்டிரா ஒரு மில்லியனுக்கு 12 இறப்புகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அதைத் தொடர்ந்து ஒடிசாவின் ஒரு வாரத்திற்கு ஒருமில்லியனுக்கு 9 இறப்புகள் என்று 3வது இடத்தில் உள்ளது. வாரத்திற்கு ஒரு மில்லியனுக்கு 2 இறப்புகள் என்பது தான் இந்தியாவின் சராசரி ஆகும்.

கேரளா சிஎப்ஆர்

கேரளா சிஎப்ஆர்

வாரந்தோறும் இந்தியா முழுவதும் கோவிட் வடிவங்களை பகுப்பாய்வு செய்து வரும் பொது சுகாதார நிபுணர் டாக்டர் பத்மநாபா ஷெனாய் கூறும் போது, "கேரளாவின் வழக்கு இறப்பு விகிதம் (CFR) மே 15 அன்று 0.3% ஆக இருந்தது. ஆனால் ஜூலை 31 க்குள் அது 0.49% ஆக அதிகரித்தது. இதனிடையே கேரளா மாநில நாட்டில் மிகக் குறைந்த இறப்பு விதிகம் (CFR) உள்ள மாநிலங்களில் ஒன்றாக தொடர்கிறது" என்று கூறினார்.

கேரளா ஆக்டிவ் கேஸ்கள்

கேரளா ஆக்டிவ் கேஸ்கள்

கேரளாவின் ஏழு நாள் சராசரி தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் 0.61% ஆக உள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக இந்தியா 0.13% ஆகவும் உள்ளது. கேரளா மாநிலத்தின் ஆர்-நாட் (இனப்பெருக்கம் விகிதம்) 1.28 ஆகும், அதன் தினசரி ஆக்டிவ் கேஸ்கள் மற்றும் இறப்புகள் இப்போது நாட்டில் மிக அதிகம் ஆகும்.

நாட்டிலேயே அதிகம்

நாட்டிலேயே அதிகம்


இந்த வாரம் திங்கட்கிழமையன்று, கேரளா நாட்டிலேயே அதிக இறப்புகளைப் பதிவுசெய்தது, மொத்த 420 இறப்புகளில் 28% (118) கேரளாவில் ஏற்பட்டது. இருப்பினும், செவ்வாயன்று, மகாராஷ்டிரா 177 இறப்புகளுடன் மீண்டும் தினசரி எண்ணிக்கையில் கேரளாவை (148) முந்தியது.

கவலைக்குரியது

கவலைக்குரியது

சுகாதார நிபுணர் ரிஜோ எம் ஜான் இதுபற்றி கூறும் போது, "கேரளாவின் கோவிட் -19 இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது, இது கவலைக்குரிய விஷயம். முதல் அலையை விட இரண்டாவது அலையில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது" என்றார்.

 25 சதவீதம் இறப்புகள்

25 சதவீதம் இறப்புகள்

கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில், கேரளா தான் நாட்டில் சுமார் 50% புதிய கோவிட் கேஸ்களை பதிவு செய்கிறது. நாட்டின் தினசரி மொத்த இறப்பு எண்ணிக்கையில் சராசரியாக 20% முதல் 25% வரை கேரளாவில் நிகழ்க்கிறது.

மரணம் தவிர்க்க முடியாதது

மரணம் தவிர்க்க முடியாதது

கேரளாவில் நிகழும் கொரோனா கேஸ்கள் குறித்து பகுப்பாய்வு செய்து வரும் மருத்துவ நிபுணர் டாக்டர் அருண் கூறும் போது, "கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் போது மரணம் தவிர்க்க முடியாதது. ஆனால் கேரளாவால் தடுக்கக்கூடிய இறப்புகளைக் கட்டுப்படுத்த முடிந்தது - ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாதது, வென்டிலேட்டர், தடுப்பூசி போன்றவற்றால் -பெரிய அளவிற்கு இறப்பை கேரளாவால் தடுக்க முடிந்தது" என்றார்.

Recommended Video

    மீண்டும் அதிகரிக்கும் Coronavirus.. தடுக்க முடியாமல் விழிபிதுங்கும் China
     பாதிப்பு

    பாதிப்பு

    கேரளாவில் ஆகஸ்ட் 6ம் தேதியான இன்றைய நிலவரப்படி 60 வயதுக்கும் மேற்பட்ட 23.7 சதவீதம் பேர் கோவிட் தடுப்பூசி போட்டுள்ளனர். இதேபோல் 45 முதல் 60 வயதுக்கு உள்பட்டவர்கள் 33 சதவீதம் பேரும், 18 முதல் 44 வயது வரை உள்ள 43.3 சதவீதம் பேரும் கேரளாவில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி 22,040 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 117 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். கேரளாவில் 1,77,924. பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+