For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குபீரென்று கிளம்பிய குரங்கு காய்ச்சல்.. தவிக்கும் கேரளா.. இந்த அறிகுறிகள் இருக்கா? உஷார் மக்களே!

Google Oneindia Tamil News

வயநாடு: கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது குரங்கு காய்ச்சல் பரவ துவங்கியுள்ளது. வயநாட்டில் 24 வயது நபர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த மாநில சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

கேரளாவில் பறவைக்காய்ச்சல், எலி காய்ச்சல், குரங்கு காய்ச்சல் உள்பட வெவ்வேறு வகையான காய்ச்சல்கள் அவ்வப்போது பொதுமக்களை தாக்கும். இதனால் எப்போதும் அந்த மாநில சுகாதாரத்துறை விழிப்பாக இருக்கும்.

இந்த நிலையில் தற்போது கேரளாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:

தை அமாவாசை: சதுரகிரி கோவிலில் குவிந்த பக்தர்கள் - காய்ச்சல் உள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை தை அமாவாசை: சதுரகிரி கோவிலில் குவிந்த பக்தர்கள் - காய்ச்சல் உள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை

வயநாடு மாவட்டம்

வயநாடு மாவட்டம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், திருநெல்லி ஊராட்சியில் பானவல்லி பழங்குடி கிராமம் உள்ளது. இங்கு மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 24 வயது நிரம்பியவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிகிச்சை

சிகிச்சை

இதையடுத்து அவர் மானந்தவாடி மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நலம் நன்றாக உள்ளது. தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி வயநாடு மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் சீனா கூறுகையில், ‛‛இது சீசன் வகை காய்ச்சல் தான். இந்தியாவின் தெற்கு பகுதிகளில் மலையையொட்டிய பகுதிகளில் பரவும். தற்போது வரை ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார். வேறு யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம்.''

ஏற்கனவே எச்சரிக்கை

ஏற்கனவே எச்சரிக்கை

மேலும் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛மாநிலத்தில் சில இடங்களில் குரங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு உறுதியானதால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார். மேலும் ‛‛2022ல் மாநிலத்தில் பதிவான முதல் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இதுவாகும். இந்த காய்ச்சலை பரப்பும் வைரஸ் பிளவிவிர்டே குடும்பத்தை சேர்ந்தது'' எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா குறையாத நிலையில்...

கொரோனா குறையாத நிலையில்...

கேரளா இன்னும் கொரோனா 3ம் அலையில் இருந்து மீளவில்லை. தினசரி 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதோடு, தொடர்ந்து பலிகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் குரங்கு காய்ச்சல் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இது அந்த மாநில அரசுக்கும், சுகாதாரத்துறைக்கும் தலைவலியை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் குரங்கு காய்ச்சல் மேற்கொண்டு பரவாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள்

குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள்

குரங்கு காய்ச்சலின் சில பொதுவான அறிகுறிகள்: உடல் வெப்பநிலையில் திடீர் அதிகரிப்பு, அல்லது குளிருடன் கூடிய காய்ச்சல், தலைவலி, தசை வலி, சோர்வு, முதுகு வலி, வீங்கிய கணுக்கள், சளியுடன் கூடிய அல்லது வறட்டு இருமல் ஆகியவை குரங்கு காய்ச்சல் அறிகுறிகளாக

English summary
Kerala reports first case of monkey fever. after 24 year old man affect in wayanad. Find the symptoms here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X