உங்க வீட்டு குட்டீஸ்களின் திறமையை கொண்டாட ஹார்லிக்ஸ் சூப்பர் கிட்ஸ் அவார்ட்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹார்லிக்ஸ் சூப்பர் கிட்ஸ் விருதுகள் வழங்கும் விழா இம்மாதம் நடைபெறுகிறது.

ஊட்டியை சேர்ந்த ரக்ஷித் ஷங்கருக்கு சிறுவயதில் இருந்தே நடனம் என்றால் உயிர். டிவியை பார்த்து நடனம் கற்றுக் கொண்ட ரக்ஷித் பின்னர் நடன வகுப்பில் சேர்ந்து முறையாக பயின்றார்.

Kids, are you ready?: Horlicks Super Kids Awards

வார இறுதி நாட்களில் அனைவரும் குடும்பத்துடன் நேரம் செலவிட ரக்ஷித்தோ ஊட்டியில் இருந்து கோவைக்கு சென்று நடனம் கற்றுக் கொண்டார். பிரபுதேவாவை முன் உதாரணமாகக் கொண்டு அவரை போன்றே பெரிய டான்ஸ் மாஸ்டராக விரும்புகிறார் ரக்ஷித்.

தன் வளர்ச்சி மீதான ஆர்வத்தில் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். நிதி பிரச்சனையால் பிரபல டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தார் ரக்ஷித். இதனால் மனமுடைந்து போகாமல் இந்த வாய்ப்பு போனால் என்ன அடுத்து இதை விட நல்ல வாய்ப்பு வரும் என்று உள்ளார்.

தான் ஒரு நாள் நிச்சயம் சாதித்து பெரிய ஆளாக ஆவோம் என்ற நம்பிக்கையுடன் உள்ளார். இந்நிலையில் குழந்தைகளின் திறமையை கண்டறிந்து பாராட்ட ஹார்லிக்ஸ் சூப்பர் கிட்ஸ் விருதுகள் விழா நடத்தப்பட உள்ளது. தென்னிந்தியாவில் குழந்தைகளின் திறமையை கண்டறிய நடத்தப்படும் முதல் விருது விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

நடனம், இசை, விளையாட்டு, படிப்பு, கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு ஹார்லிக்ஸ் சூப்பர் கிட்ஸ் விருது விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

ஹார்லிக்ஸ் சூப்பர் கிட்ஸ் விருது விழா ஜனவரி மாதம் நடைபெறுகிறது. இந்த விழா ஸ்டார் விஜய் மற்றும் ஏசியாநெட் தொலைக்காட்சி சேனல்களில் பின்னர் ஒளிபரப்பப்படும்.

English summary
Horlicks Super Kids Awards, which will be South India’s first ever kids’ recognition awards show, is being held with an intention to celebrate, reward and most importantly, provoke the #HungerForGrowth in the kids who have stopped at nothing to excel in the fields of Dance, Music, Sports and Academics and Innovation.