கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டம்: குமாரசாமி வார்னிங்
பெங்களூரு: கர்நாடகத்தில் 362 பேரின் ஆட்சிப் பணி நியமன ஆணையை ரத்து செய்தது தொடர்பாக முதல்வர் சித்தராமையா உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி கூறியுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கர்நாடக ஆட்சிப் பணி தேர்வில் முறைகேடு நடந்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது.

இதையடுத்து தேர்ச்சி பெற்ற 362 பேரின் பணி நியமன ஆணையை நிறுத்தி வைப்பது தொடர்பாக கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. முறையான விசாரணை நடத்தி தீர்ப்பு வெளியாகும்வரை பணி நியமன உத்தரவை அமல்படுத்த முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதை கண்டித்து தேர்ச்சி பெற்ற 362 பேரும் தங்களது குடும்பத்தினருடன் சுதந்திர பூங்காவில் கடந்த 28-நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிர்க்கட்சிகளான பாஜக, முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இது குறித்து பெங்களூரில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முக்கிய தலைவரான எச்.டி. குமாரசாமி, "கர்நாடக முன்னாள் முதல்வர்கள் ஜே.எச்.படேல், தரம் சிங் ஆட்சி காலத்தில் துணை முதல்வராக இருந்த சித்தராமையா, கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வில் 1600-க்கும் மேற்பட்டோருக்கு பணி வழங்குமாறு சிபாரிசு செய்துள்ளார். அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதில் தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் யாருமில்லை.
ஊழலை ஒழிப்பதாக பேசி வரும் சித்தராமையா லஞ்சம் வாங்கிக்கொண்டு சிபாரிசு கடிதம் கொடுத்தார் என்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் இப்போது ஊழல் நடந்ததாக புகார் வந்ததும் தேர்ச்சி பெற்ற 362 பேரின் பணி நியமன ஆணையை ரத்து செய்தது வேடிக்கையாக இருக்கிறது.
தன் மீது தவறே இல்லையென்றால் இவ்விவகாரத்தை உடனடியாக நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை நிலைநாட்ட விரும்பினால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சித்தராமையா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
362 பேருக்கு பணி நியமன ஆணையை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சித்தராமையா உடனடியாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவோம்" என்றார்.
காங்கிரசார் போராட்டம்
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது ஆதாரமற்ற புகார்களை தெரிவித்து வரும் குமாரசாமிக்கு எதிராக பெங்களூரில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி சுதந்திர பூங்காவில் திரண்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications