For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக முதல்வராக பதவியேற்கும் குமாரசாமி இன்று தமிழகம் வருகை.. ஸ்ரீரங்கம் கோவிலில் சிறப்பு பூஜை

கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி இன்று தமிழகம் வர இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள மஜத மாநில தலைவர் குமாரசாமி இன்று தமிழகம் வர இருக்கிறார். இன்று மாலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் அவர் தரிசனம் செய்கிறார்.

கர்நாடகாவில் 104 இடங்களில் பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால் தற்போது மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

Kumaraswamy plans to do special Pooja in Srirangam Temple, TN today

இதனால் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி. அவர் புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார்.

கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி இன்று தமிழகம் வர இருக்கிறார். இன்று மாலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் அவர் தரிசனம் செய்கிறார்.

தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் - மஜத எம்எல்ஏக்களின் சான்றிதழுடன் கோவிலில் பூஜை நடத்த திட்டம் மிட்டுள்ளார். இதே போல் தேர்தலுக்கு முன்பு குமாரசாமியின் சகோதரர் ஸ்ரீரங்கம் கோவிலில் பூஜை நடத்தினார். தேர்தலில் வெற்றபெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று பூஜை நடத்தினார்.

இப்போது ஆட்சி அமைக்க இருப்பதால் வேண்டுதலை நிறைவேற்ற அவர் திருச்சி வருகிறார். தனி விமானத்தில் திருச்சி வரும் அவர் சிறப்பு பூஜை நடத்துவார் என்பது குறிப்பித்தக்கது.

English summary
Kumaraswamy plans to do special Pooja in Srirangam Temple, Tamil Nadu today after his huge victory in Karnataka election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X