லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை: மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஜாமீன் மனு தள்ளுபடி!
லக்கிம்பூர்: உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் 4 பேரை கார் ஏற்றி படுகொலை செய்த வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உட்பட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
லக்கிம்பூரில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கறுப்பு கொடி போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் 3-ந் தேதி லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது அவர்கள் மீது சொகுசு கார் ஏற்றப்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே 4 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. இதையடுத்து மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் ஆஷிஸ் மிஸ்ரா உள்ளிட்ட 10 பேரை உ.பி. போலீசார் கடந்த மாதம் 9-ந் தேதி கைது செய்தனர்.

ஆஷிஸ் மிஸ்ரா துப்பாக்கிச் சூடு நடத்தினாரா?
இவ்வழக்கில் கடந்த வாரம் தடவியல் துறையின் அறிக்கை வெளியாகி இருந்தது. அதில் ஆஷிஸ் மிஸ்ராவின் துப்பாக்கியில் இருந்து தோட்டா பாய்ந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் லக்கிம்பூர் விவசாயிகள் மீது ஆஷிஸ் மிஸ்ராதான் துப்பாக்கிச் சூடு நடத்தினாரா? என்பது மட்டும் உறுதி செய்யப்படாமல் இருந்தது.

ஜாமீன் மனுக்கள் தாக்கல்
இதனிடையே ஆஷிஸ் மிஸ்ரா உள்ளிட்ட 3 பேர் லக்கிம்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தங்களுக்கு ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் ஆஷிஸ் மிஸ்ரா, லவ் குஷ் ராணா, ஆஷிஸ் பாண்டே ஆகிய 3 பேரின் ஜாமீன் மனுக்களை லக்கிம்பூர் நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது. இதனைத் தொடர்ந்து இந்த 3 பேரும் லக்னோ உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

3 பேரின் ஜாமீன் மனுக்கள் டிஸ்மிஸ்
இந்த ஜாமீன் மனுக்களை டிஸ்மிஸ் செய்த மாஜிஸ்திரேட் முகேஷ் மிஸ்ரா, தற்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் ஆஷிஸ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஆஷிஸ் மிஸ்ரா உள்ளிட்ட 3 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஆகையால் 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
முன்னதாக உச்சநீதிமன்றத்தில் லக்கிம்பூர் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, லக்கிம்பூர் படுகொலை குறித்து வெளிமாநில ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்கிற உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை ஏற்பதாக உ.பி. அரசு தெரிவித்திருந்தது. உ.பி.அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே இதனைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications