For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"முக்கோண இடி".. பாஜகவை முந்துமா ஆம் ஆத்மி.. குஜராத்தின் 89 தொகுதிகளிலும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது

குஜராத்தில் இன்றுடன் 89 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் முடிகிறது

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளநிலையில், பிரச்சாரங்கள் இன்றுடன் ஓய்கிறது... இதையடுத்து, குஜராத்தில் பரபரப்பும், எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.

நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது குஜராத் சட்டசபை தேர்தல்.. கடந்த 6 மாதத்துக்கு முன்பேயே இங்கு களம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

அத்துடன் பிரச்சாரமும் சேர்ந்து கொண்டதால், தேசிய அரசியலில் அனலடிக்க ஆரம்பித்துவிட்டது குஜராத் தேர்தல்..

குஜராத் பிரசாரத்தில் பாய்ந்த வந்த கற்கள்.. குஜராத் பிரசாரத்தில் பாய்ந்த வந்த கற்கள்.. "என்ன தவறு செய்தேன்" என உருகிய கெஜ்ரிவால்! பரபரப்பு

 டஃப் போட்டி

டஃப் போட்டி

182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1-ந் தேதி, 5-ந் தேதி என்று 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது... முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.. வழக்கமாக குஜராத்தில் தேர்தல் என்றாலே, பாஜகவுக்கும், காங்கிரசுக்கும்தான் போட்டி இருக்கும்.. ஆனால், இந்த முறை, ஆம் ஆத்மியும் களமிறங்கிவிட்டது.. குஜராத் என்றில்லை, கடந்த 2 வருட காலமாகவே ஆம் ஆத்மி, ஒவ்வொரு மாநிலத்திலும் அதிரடியை காட்டிக் கொண்டிருக்கிறது.

 மும்முனை

மும்முனை

குஜராத்தில் 181 வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.. ஆட்சியை பிடிப்போம் என்றும் சொல்லி கொண்டிருப்பதால், மும்முனைப்போட்டி குஜராத்தில் எழுந்துள்ளது.. மொத்தம், 1,621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள் ஆவர்.. அவர்களில் 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியிலும், குஜராத் கலவர வழக்கு குற்றவாளி மனோஜ் குக்ரானியின் மகள் பயல் குக்ரானி நரோடா தொகுதியிலும் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 ரிசல்ட்ஸ்

ரிசல்ட்ஸ்

4 பழங்குடியினர் தொகுதிகளில் காங்கிரஸ் பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆம் ஆத்மியும் 3 பழங்குடியினர் தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை போட்டியிடச் செய்துள்ளது... 89 தொகுதிகளில் 1-ந் தேதி நடக்கிற முதல் கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்களின் ரிசல்ட் என்னவாக இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.. முதல் கட்டமாக 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அந்த தொகுதிகளில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

 அனலில் குஜராத்

அனலில் குஜராத்

கடைசி நாள் பிரச்சாரம் என்பதால், மேலிட தலைவர்கள், வாக்கு சேகரிப்பில் மும்முரமாகி உள்ளனர்.. பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் கார்கே, மற்றும் ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள், குஜராத்தில் முற்றுகையிட்டு வாக்கு சேகரிப்பில் மும்முரமாகிவிட்டனர். இன்று கடைசி நாள் என்பதால், குஜராத் மாநிலமே உச்சக்கட்ட பரபரப்பில் காணப்படுகிறது.

English summary
Last day and gujarat poll december 1st campaigning ends today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X