'மக்களின் ஜனாதிபதி' அப்துல் கலாம் உடலுக்கு பிரணாப் முகர்ஜி, மோடி, தலைவர்கள் மலரஞ்சலி!
டெல்லி: மறைந்த "மக்கள் ஜனாதிபதி" அப்துல் கலாம் அவர்களின் உடல் டெல்லி ராஜாஜிமார்க்கில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு வந்தடைந்தது. இதனையடுத்து பல்வேறு தலைவர்களும், பிரமுகர்களும் அவருடைய உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாரடைப்பால் காலமானர். மேகலாயாவில் கருத்தரங்கு ஒன்றில் பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

ராஜாஜிமார்க் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் அவர்களின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, தமிழக ஆளுநர் ரோசையா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவர் அமித் ஷா, உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், அதிமுக எம்.பிக்கள் தம்பிதுரை, மைத்ரேயன், நவநீத கிருஷ்ணன் உட்பட 47 பேர், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பாஜக மூத்த தலைவர் அத்வானி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கோவா ஆளுநர் மிரிதிலா சின்ஹா, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி டி.ராஜா ஆகியோரும் இறுதி மரியாதையை செலுத்தினார்கள்.
ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, தி.மு.க. எம்.பி.சிவா ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைக் குடியரசுத் தலைவர் ஹமீன் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆகியோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் கலாமின் இல்லத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில், தன்னுடைய இரங்கலைப் பதிவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications