இந்தியாவை அசிங்கப்படுத்தாதீங்க: ஷூ வாங்க கெஜ்ரிவாலுக்கு ரூ.364க்கான டிடி அனுப்பிய என்ஜினியர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவை மீண்டும் தர்மசங்கடப்படுத்த வேண்டாம் தயவு செய்து ஒரு ஜோடி ஷூ வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

67வது குடியரசு தினம் கடந்த மாதம் கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்து அளித்தார்.

Letter to Arvind Kejriwal - `Don't embarrass India again, buy yourself a pair of shoes`

அந்த விருந்து நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் சிலர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விருந்து நிகழ்ச்சிக்கு கெஜ்ரிவால் சாக்ஸ் போட்டு செருப்பு அணிந்து வந்தார்.

அந்த புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினியரான சுமித் அகர்வால் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்துடன் அவர் ரூ.364க்கான டிடியையும் அனுப்பி வைத்துள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

பிரான்ஸ் அதிபர் உள்பட பலர் கலந்து கொண்ட விருந்தில் நீங்கள் செருப்பு அணிந்து வந்ததை பார்த்து நான் மனமுடைந்தேன். டெல்லி அரசு தனது ஊழியர்களுக்கு சரியான காலணி கூட வழங்காதது வருத்தமான விஷயம். இனியும் இந்தியாவை தர்மசங்கடப்படுத்த வேண்டாம். நீங்கள் ஷூ வாங்க இத்துடன் டிடி அனுப்பியுள்ளேன்.

நீங்கள் வெறுக்கும் பிரதமர் மோடியைவிட நீங்கள் தான் அதிகம் சம்பளம் வாங்குகிறீர்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+